இன்றைய ராசி பலன்கள்
மேஷம்
உழைப்பிற்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் ஏற்படும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு மேம்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். நண்பர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். சிந்தனைகளில் தெளிவு உண்டாகும். போட்டிகள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அஸ்வினி : பாராட்டுகள் கிடைக்கும்.
பரணி : செல்வாக்கு மேம்படும்.
கிருத்திகை : தெளிவு உண்டாகும்.
ரிஷபம்
மனதில் இனம்புரியாத சிந்தனைகளால் குழப்பம் உண்டாகும். செய்யும் முயற்சிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். நெருக்கமானவர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கடன் விஷயங்களில் பொறுமை வேண்டும். திடீர் முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
கிருத்திகை : குழப்பம் உண்டாகும்.
ரோகிணி : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
மிருகசீரிஷம் : பொறுமை வேண்டும்.l
மிதுனம்
மனைவி வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடும். கூட்டாளிகளின் ஆதரவால் நன்மை ஏற்படும். புதுவிதமான இடங்களுக்கு சென்று வருவீர்கள். போட்டி, பந்தயங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இழந்த பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். களிப்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
மிருகசீரிஷம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
திருவாதிரை : நன்மை ஏற்படும்.
புனர்பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
கடகம்
உயர் அதிகாரிகளின் மூலம் சில விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். வழக்குகளில் நுணுக்கமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். மனதில் இருந்துவந்த குழப்பம் மறையும். உத்தியோக பணிகளில் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாராத பொருள் வரவு உண்டாகும். கால்நடைகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
புனர்பூசம் : புரிதல் உண்டாகும்.
பூசம் : குழப்பம் மறையும்.
ஆயில்யம் : ஆர்வம் அதிகரிக்கும்.
சிம்மம்
மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். அலுவல் பணிகள் சற்று குறையும். பூர்வீக சொத்துக்கள் சார்ந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். ரசனையில் புதுவிதமான மாற்றம் உண்டாகும். கற்பனை சார்ந்த துறைகளில் கவனம் வேண்டும். தாய்மாமன் வழியில் அனுசரித்துச் செல்லவும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மகம் : சிந்தனைகள் உண்டாகும்.
பூரம் : தீர்வு கிடைக்கும்.
உத்திரம் : அனுசரித்துச் செல்லவும்.
கன்னி
தாய்வழி உறவுகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். எதிராக செயல்பட்டவர்கள் விலகிச் செல்வார்கள். குடும்ப வருமானத்தை மேம்படுத்த முயல்வீர்கள். புதிய வீடு மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். கல்விப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். விவசாயம் சார்ந்த துறைகளில் மேன்மை ஏற்படும். உறவினர்களிடத்தில் புரிதல் உண்டாகும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
உத்திரம் : எதிர்ப்புகள் விலகும்.
அஸ்தம் : எண்ணங்கள் மேம்படும்.
சித்திரை : புரிதல் உண்டாகும்.
துலாம்
எதிலும் திட்டமிட்டு செயல்படுவீர்கள். மனதளவில் தைரியம் உண்டாகும். காலி மனைகளால் ஆதாயம் அடைவீர்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். கல்வியில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். தபால் துறைகளில் புதிய அனுபவம் கிடைக்கும். விளம்பரம் சார்ந்த துறைகளில் திறமைகள் வெளிப்படும். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
சித்திரை : தைரியம் உண்டாகும்.
சுவாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.
விசாகம் : திறமைகள் வெளிப்படும்.
விருச்சிகம்
எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படும். கணிதம் தொடர்பான துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும். வங்கி சார்ந்த துறைகளில் பொறுப்புகள் மேம்படும். முன்கோபமின்றி செயல்படுவது நல்லது. நிர்வாகம் சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆன்மிகப் பணிகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். பணிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
விசாகம் : உதவிகள் கிடைக்கும்.
அனுஷம் : ஆர்வம் அதிகரிக்கும்.
கேட்டை : குழப்பம் விலகும்.
தனுசு
பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்படும். மனதில் ஏதோ இனம்புரியாத சிந்தனைகள் ஏற்பட்டு நீங்கும். துரித வகை உணவுகளை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத சில அலைச்சல்களால் ஒருவிதமான சோர்வு உண்டாகும். வழக்கு விஷயங்களில் பொறுமையை கையாளவும். நெருக்கமானவர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். சாதகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
மூலம் : மாற்றம் ஏற்படும்.
பூராடம் : சோர்வு உண்டாகும்.
உத்திராடம் : அனுசரித்துச் செல்லவும்.
மகரம்
மனதில் இருக்கும் ரகசியங்களை மற்றவர்களிடம் பகிர்வதை குறைத்துக் கொள்வது நல்லது. வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். புலனாய்வு சார்ந்த விஷயங்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். புதிய முதலீடுகளில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். புதிய இடத்தில் தங்குவதற்கான சூழ்நிலைகள் அமையும். புரியாத சில கேள்விகளுக்கு தெளிவு ஏற்படும். சோர்வு விலகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
உத்திராடம் : பயணங்கள் கைகூடும்.
திருவோணம் : ஆலோசனைகள் கிடைக்கும்.
அவிட்டம் : தெளிவு ஏற்படும்.
கும்பம்
பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். பணி நிமிர்த்தமான புதிய முயற்சிகள் பலிதமாகும். சேமிப்பு சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பெருந்தன்மையான செயல்களின் மூலம் மதிப்பு மேம்படும். சுய முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். பக்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
அவிட்டம் : ஆசிகள் கிடைக்கும்.
சதயம் : ஒத்துழைப்பு ஏற்படும்.
பூரட்டாதி : செல்வாக்கு அதிகரிக்கும்.
மீனம்
திட்டமிட்ட செயல்களில் எண்ணிய முடிவு கிடைக்கும். வியாபார பணிகளில் முன்னேற்றமான சிந்தனைகள் உண்டாகும். மனை சார்ந்த பணிகளில் ஆதாயம் ஏற்படும். துறை சார்ந்த தெளிவு பிறக்கும். மல்யுத்த போட்டிகளில் ஒருவிதமான ஆர்வம் ஏற்படும். மனதளவில் புதுவிதமான தன்னம்பிக்கை உண்டாகும். சமூகப் பணிகளில் பலதரப்பட்ட அனுபவம் ஏற்படும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
பூரட்டாதி : முடிவு கிடைக்கும்.
உத்திரட்டாதி : ஆதாயம் ஏற்படும்.
ரேவதி : அனுபவம் உண்டாகும்.