நாள் : சுபகிருது வருடம் புரட்டாசி மாதம் 23 ஆம் தேதி திங்கட்கிழமை 10.10.2022
திதி : இன்று அதிகாலை 03.11 மணி வரை பௌர்ணமி. பின்னர் பிரதமை
நட்சத்திரம் : இன்று மாலை 05.43 மணி வரை ரேவதி. பின்பு அஸ்வினி.
நாமயோகம் : இன்று மாலை 06.35 மணி வரை வியாகாதம். பின்பு ஹர்ஷணம்.
கரணம் : இன்று அதிகாலை 03.11 மணி வரை பவம் . பின்னர் பகல் 02.57 மணி வரை பாலவம். பின்பு கௌலவம்.
நட்சத்திரம் : இன்று மாலை 05.43 மணி வரை ரேவதி. பின்பு அஸ்வினி.
நாமயோகம் : இன்று மாலை 06.35 மணி வரை வியாகாதம். பின்பு ஹர்ஷணம்.
கரணம் : இன்று அதிகாலை 03.11 மணி வரை பவம் . பின்னர் பகல் 02.57 மணி வரை பாலவம். பின்பு கௌலவம்.
அமிர்தாதியோகம்: இன்று காலை 06.01 மணி வரை அமிர்த யோகம். பின்னர் சித்த யோகம்.
நல்ல நேரம்
காலை : 06.00 முதல் 07.00 மணி வரை
காலை : 09.15 முதல் 10.15 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
தவிர்க்க வேண்டிய நேரம்
ராகு காலம்: காலை 07.30 முதல் 09.00 மணி வரை.
எமகண்டம்: காலை 10.30 முதல் 12.00 மணி வரை.
குளிகை: பகல் 01.30 முதல் 03.00 மணி வரை.
சூலம்: கிழக்கு.
பரிகாரம்: தயிர்.
நேத்திரம்: 2 –
ஜீவன்: 1
இன்றைய ராசிப்பலன் – 08.10.2022
*_🔯 மேஷம் -ராசி: 🐐_*
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகள் பெருமைபடும்படி நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வியாபாரத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் சுமூகமாக முடியும். கடன்கள் குறையும்.
⭐️அசுவினி: நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன்வழியில் ஆதாயம் உண்டாகும்.
⭐️பரணி: நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும்.
⭐️கிருத்திகை:நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகள் வழியில் செலவுகள் ஏற்படும்.
*_🔯 ரிஷபம் -ராசி: 🐂_*
இன்று உங்கள் இல்லம் தேடி ஆனந்தமான செய்தி வந்து சேரும். உறவினர்களால் உதவி கிடைக்கும். பொன் பொருள் வாங்கி மகிழ்வீர்கள். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். சேமிப்பு உயரும்.
⭐️கிருத்திகை: நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் ஆதாயம் உண்டாகும்.
⭐️ரோகிணி :நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் நிறைவேறும்.
⭐️மிருகசீரிடம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.
*_🔯 மிதுனம் -ராசி: 👫_*
இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். எடுக்கும் முயற்சிகளுக்கு நண்பர்களின் ஓத்துழைப்பு கிட்டும். தொழில் சம்பந்தமான வழக்கு விஷயங்களில் அனுகூலம் உண்டாகும். எதிலும் கவனம் தேவை.
⭐️மிருகசீரிடம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.
⭐️திருவாதிரை: நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்கள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.
⭐️புனர்பூசம் :நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களின் விஷயத்தில் தலையிடவேண்டாம்
*_🔯 கடகம் -ராசி: 🦀_*
இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு பகல் 11.27 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் அமைதியாக இருப்பது நல்லது. ஆரோக்கிய ரீதியாக இருந்த பிரச்சினைகள் படிப்படியாக குறையும்.
⭐️புனர்பூசம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.
⭐️பூசம் :நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரிடும்
⭐️ஆயில்யம்:நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது
*_🔯 சிம்மம் -ராசி: 🦁_*
இன்று உங்களுக்கு எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட காலதாமதமாகும். தேவையில்லாத அலைச்சல்கள் உண்டாகும். உங்கள் ராசிக்கு பகல் 11.27 க்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் கவனம் தேவை. மற்றவர்கள் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம்.
⭐️மகம் :நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த பணம் கிடைப்பது தாமதமாகும்.
⭐️பூரம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் பிரச்னைகள் ஏற்படும்.
⭐️உத்திரம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது
*_🔯 கன்னி -ராசி: 🧛♀️_*
இன்று பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் விஷயங்கள் நடைபெறும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார ரீதியான வெளிவட்டார நட்பு கிட்டும்.
⭐️உத்திரம் :நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழியில் செலவுகள் ஏற்படக்கூடும்.
⭐️அஸ்தம் :நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.
⭐️சித்திரை :நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களுடன் இணக்கமாக நடந்துகொள்வது நல்லது.
*_🔯 துலாம் -ராசி: ⚖_*
இன்று உற்றார் உறவினர்களால் குடும்பத்தில் ஒற்றுமை குறைவு ஏற்படும். உடல் ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு பாதிப்புகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலம் உண்டாகும். பணவரவு ஓரளவு சிறப்பாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும்.
⭐️சித்திரை: நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும்.
⭐️சுவாதி: நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் ஆதாயம் ஏற்படும்.
⭐️விசாகம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்.
*_🔯 விருச்சிகம் -ராசி: 🦂_*
இன்று நீங்கள் எடுக்கும் காரியங்களில் வெற்றி பெற அருகில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் சற்று செலவுகளும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பண விஷயத்தில் சிக்கனமாக இருப்பது நல்லது.
⭐️விசாகம் :நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தொடங்க உகந்த நாள்.
⭐️அனுஷம் :நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பண விவகாரத்தில் கவனமாக இருப்பது நல்லது.
⭐️கேட்டை: நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும்.
*_🔯_தனுஷ் ராசி: 🏹_*
இன்று எந்த செயலையும் துணிச்சலோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தினரின் அன்பும் ஆதரவும் கிட்டும். தொழில் ரீதியான வெளியூர் பயணங்களில் சாதகப்பலன் உண்டாகும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். கடன் பிரச்சினை தீரும்.
⭐️மூலம் :நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நீண்டநாள் சந்திக்காத நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.
⭐️பூராடம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கையிருப்பு குறையும்.
⭐️உத்திராடம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.
*_🔯 மகரம் -ராசி: 🐴_*
இன்று உங்களுக்கு உத்தியோக ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். எடுக்கும் முயற்சிகளில் நிதானமாக செயல்பட்டால் அனுகூலம் கிட்டும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. தொழில் ரீதியான வெளியூர் பயணங்களால் நற்பலன்கள் கிடைக்கும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும்
⭐️உத்திராடம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் ஏற்படும்.
⭐️திருவோணம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சி சாதகமாக முடியும்.
⭐️அவிட்டம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகளுக்கு வாய்ப்பு உண்டு
*_🔯 கும்பம் -ராசி. ⚱_*
இன்று தொழில் ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் அனு-கூலப் பலன் உண்டாகும். உற்றார் உறவினர்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கும்.
⭐️அவிட்டம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும்.
⭐️சதயம் :நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.
⭐️பூரட்டாதி: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.
*_🔯 மீனம் -ராசி: 🐠_*
இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். வியாபார ரீதியாக செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வதன் மூலமாக வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வேலையில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும்.
⭐️பூரட்டாதி: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது.
⭐️உத்திரட்டாதி : நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களுடன் அனுசரணையாக நடந்து கொள்ளவும்.
⭐️ரேவதி :நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.