Saturday, December 2, 2023
Homeசெய்திகள்இன்றைய முக்கிய செய்திகள் (80)

இன்றைய முக்கிய செய்திகள் (80)

இன்றைய முக்கிய செய்திகள் (80)

  1. பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா, நீதிபதி வேலுமணி உட்பட 7 பேரை மாற்ற கொலிஜியம் பரிந்துரை
  2. பரிந்துரைத்த 24 மணி நேரத்தில் தேர்தல் ஆணையர் நியமனம் எப்படி? – ஒன்றிய அரசுக்கு நீதிபதி கேள்வி
  3. மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பு வழக்கை என்.ஐ.ஏ.வுக்கு மாற்ற கர்நாடக அரசு முடிவு
  4. கொள்கையை காப்பாற்ற எதையும் செய்யலாம், எதையும் இழக்கலாம் என உறுதியாக உள்ளேன் – முதல்வர்
  5. ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா தொடர்பாக விளக்கம் கோரி அரசுக்கு ஆளுநர் ரவி கடிதம்
  6. கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய சுவாதியை நாளை ஆஜர்படுத்த ஐகோர்ட் ஆணை
  7. ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கை நவ.29-க்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
  8. காங்கிரஸில் இருந்து ரூபி மனோகரனை தற்காலிகமாக நீக்கியது கட்சி ஒழுங்கு நடவடிக்கை குழு
  9. தொல்லியல் சின்னங்கள் பாதுகாக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் – ஐகோர்ட் மதுரை கிளை
  10. தனியார் பள்ளியில் அரசியல், மதம், சாதி சார்ந்த நிகழ்ச்சிக்கு மெட்ரிக். பள்ளிகள் இயக்ககம் தடை
  11. நம்ம ஊரு சூப்பரு இயக்க விழிப்புணர்வு பேனர் அச்சடித்ததில் முறைகேடு இல்லை – தமிழக அரசு
  12. காய்ச்சலால் அனுமதிக்கப்பட்ட கமல் ஓரிரு நாளில் வீடு திரும்புவார் – தனியார் மருத்துவமனை
  13. அதிமுக ஆட்சியில் சிமெண்ட் நிறுவனத்தில் முறைகேடு; ஊழல் கண்காணிப்பு துறை பதில் தர ஐகோர்ட் ஆணை
  14. பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகள் 190 பேருக்கு ₹4.85 கோடி ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர்
  15. மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பு: “இஸ்லாமிக் ரெசிஸ்டன்ஸ் கவுன்சில்” அமைப்பு பொறுப்பேற்பு
  16. உலகக்கோப்பை கால்பந்து: கேமரூன் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது சுவிட்சர்லாந்து அணி
  17. 2001-02 கல்வியாண்டு முதல் அரியர் உள்ள பொறியியல் மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு
  18. பி.எஃப். திட்டத்தில் சேருவதற்கான அதிகபட்ச ஊதிய வரம்பு ₹15,000-லிருந்து ₹21,000ஆக உயர வாய்ப்பு
  19. தேர்தல் ஆணையர்கள் நியமன வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு
  20. சிறார் குற்ற வழக்குகளில் வரைமுறையின்றி கைது – போலீஸ் நடவடிக்கை குறித்து ஐகோர்ட் அதிருப்தி
  21. ரூபாய் நோட்டு புழக்கத்தை ஒழுங்குபடுத்துவதற்கான அதிகாரம் ஆர்.பி.ஐ.க்கே உள்ளது – ப.சி.
  22. தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்தில் ₹4 கோடி மோசடி; கப்பல் மேலாண் மேலாளருக்கு 3 ஆண்டு சிறை
  23. நாட்டில் நகர்ப்புற வேலையின்மை விகிதம் ஜூலை – செப்டம்பர் காலாண்டில் 7.2%ஆக சரிவு – ஒன்றிய அரசு
  24. ஒன்றிய அரசின் பணமதிப்பு ரத்தால் நாட்டின் பொருளாதாரம் முடங்கிவிட்டது – ப.சிதம்பரம்
  25. 10 எம்எல்ஏக்கள் ஆதரவுகூட இல்லாத சச்சின் பைலட்டுக்கு தலைமை பொறுப்பு தர முடியாது-கெலாட்
  26. டெல்லி ஜாமா மசூதிக்குள் பெண்கள் தனியாகவும் குழுவாகவும் நுழைய தடை விதிப்பு
  27. அதிமுக ஆட்சியில் காவிரி-குண்டாறு திட்டத்திலும் ஊழல் நடந்துள்ளது – செல்வப்பெருந்தகை
  28. சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா – பல நகரங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்
  29. நவ. 2021-ல் சந்தைக்கு வந்த Paytm பங்கு ஒரே ஆண்டில் 79% விலை சரிந்து முதலீட்டாளருக்கு இழப்பு
  30. அயலகத் தமிழர் தின விழா கொண்டாடுதல் தொடர்பாக துணைக் குழுக்கள் அமைத்து அரசாணை வெளியீடு
  31. கஞ்சிக்கோடு-வாளையாறு வழித்தடத்தில் இரவில் ரயிலை 30 கி.மீ. வேகத்தில் இயக்க ஐகோர்ட் ஆணை
  32. ரயில்வே துறையில் முறைகேடு, ஊழலில் ஈடுபட்ட 177 பேரை பணி நீக்கம் செய்துள்ளது ரயில்வே
  33. நீலகிரி, முதுமலையில் அந்நிய மரத்தை அகற்றாவிடில் அவமதிப்பு; வனத்துறைக்கு ஐகோர்ட் எச்சரிக்கை
  34. சென்னையில் பாமாயில், பருப்பு சார்ந்த தொழிற்சாலை உட்பட 40 இடங்களில் 2-வது நாளாக ஐ.டி. ரெய்டு
  35. இந்தியா – நியூசிலாந்து இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது
  36. மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பு: விசாரணைக்காக மங்களூரு சென்றுள்ளார் ஆசிரியர் சுரேந்தர்
  37. திருவண்ணாமலை தீபத்திருவிழா: 2,700 சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது போக்குவரத்துத் துறை
  38. உடல்நலக்குறைவால் ஐதராபாத் மருத்துவமனையில் சமந்தா அனுமதி என பரவிய தகவல் வதந்தி
  39. நாடு கடத்தப்படுவதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரி தொழிலதிபர் நீரவ் மோடி மனு
  40. கன்னியாகுமரி ரயில் நிலையத்தை ₹49.36 கோடியில் மேம்படுத்த ரயில்வே துறை அனுமதி
  41. போலீஸ் அதிகாரிகள் மீதான புகார்களை விசாரிக்க சிபிசிஐடிக்கு அதிகாரம் உண்டு – அரசாணை வெளியீடு
  42. புதுகை டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அரசு மருத்துவமனை மீண்டும் அங்கேயே இயங்கும் – மா.சு.
  43. சீர்காழி, தரங்கம்பாடியில் மழை பாதித்தோருக்கு ₹1,000 நிவாரணம் வழங்கும் பணி தொடங்கியது
  44. தமிழ் எழுத்தாளர் இமையத்திற்கு கன்னட தேசிய கவி குவேம்பு இலக்கிய விருது அறிவிப்பு
  45. பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் இருந்து மேலும் 5 பேர் அகதிகளாக தமிழகம் வந்தனர்
  46. உலக இளையோர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவுக்கு மேலும் 4 பதக்கங்கள் உறுதி
  47. திருவாரூர்: கஜா புயலால் நெல் மூட்டைகள் சேதம்; 4 விவசாயிகளுக்கு ₹7 லட்சம் தர கோர்ட் ஆணை
  48. கலைஞர், முதலமைச்சர் பற்றி அவதூறு பேச்சு: ராஜேந்திர பாலாஜி மீது மணப்பாறை போலீசில் புகார்
  49. டெல்டாவை புறக்கணிக்கும் ரயில்வேயை கண்டித்து நவ.28 முதல் ரயில் மறியல் – செல்வராசு எம்.பி.
  50. சென்னை மாநகராட்சி 165-வது வார்டு காங். கவுன்சிலர் ஈஸ்வரபிரசாத் மரணம் – முதல்வர் இரங்கல்
  51. மஞ்சள் பையை பயன்படுத்தினால் சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுக்கலாம் – நீதிபதி மகாதேவன்
  52. தமிழ்நாட்டில் இவ்வாண்டு 13 பொறியியல் கல்லூரிகளில் 100% மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது
  53. போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கை குறித்து டிச.2-ம் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தை
  54. மதவாத சக்திகளுக்கு தமிழ்நாடு மக்கள் ஒருபோதும் இடம் கொடுக்க மாட்டார்கள் – துரை வைகோ
  55. 50 ஜிபி இலவச டேட்டா என செல்போனுக்கு வரும் இணைப்பை கிளிக் செய்யாதீர் – சைபர் கிரைம் போலீஸ்
  56. விழுப்புரம் – செஞ்சி சாலையில் அதிக பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்துக்கு ₹25,000 அபராதம்
  57. குமரி: கோயில் ஊழியர்கள் மீது சிபிஐ வழக்கு உள்ளபோது பணியில் தொடர்வது எப்படி? – நீதிபதிகள்
  58. போலீசுக்கு எதிர்ப்பு: திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் அருகே சாலையோர வியாபாரிகள் போராட்டம்
  59. சேலத்தில் நவ.26-ல் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்
  60. கும்பகோணம் மவுனசாமி மடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 சிலைகள், ஒரு ஓவியம் மீட்பு
  61. சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல், சோழவரம், கண்ணன்கோட்டை ஏரிகளுக்கு நீர்வரத்து உயர்வு
  62. இந்தியாவுக்கு எதிரான ஹாக்கி தொடரில் ஆஸி. அணியில் பங்கேற்கும் வீரர்கள் அறிவிப்பு
  63. 5 அரசு மருத்துவமனைகளில் இருதய அறுவை சிகிச்சை வசதி கோரி மனு-மருத்துவ செயலர் பதில் தர ஆணை
  64. திருவாரூர்: தர்கா பெரிய கந்தூரி கொடியேற்றம், சந்தனக்கூடு விழா – நாளை, டிச.4-ல் டாஸ்மாக் மூடல்
  65. தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை மையம்
  66. உதகை: சாதி சான்று கோரி 200 பழங்குடியின மாணவர்கள் பள்ளி, கல்லூரியை புறக்கணித்து போராட்டம்
  67. ஸ்ரீவில்லிபுத்தூர்: 2020-ல் வளர்ப்பு மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை, அண்ணனுக்கு ஆயுள்
  68. தமிழ்நாட்டில் 3,746 பாசனக் குளங்கள் முழு கொள்ளளவை எட்டி 100 சதவீதம் நிரம்பியுள்ளன
  69. திருப்பத்தூர் பாஜக நகர துணை தலைவர் கலி கண்ணன் ஊத்தங்கரையில் கொலை – போலீஸ் குவிப்பு
  70. உணவுக்காக ஆமை கொலை? – தூத்துக்குடி துறைமுக கடற்கரை அருகே அதிகாரிகள் விசாரணை
  71. சென்னை: கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் என கூறி மோசடி செய்தவர் கைது
  72. கொலை மிரட்டல்: குமரி இரணியல் பேரூராட்சி 4-வது வார்டு பாஜக கவுன்சிலர் கிரிஜா மீது வழக்கு
  73. மதுரை திருப்பாலையில் கணவர் செந்தில்குமாரை கொல்ல முயன்ற மனைவி, ஆண் நண்பருடன் கைது
  74. கரூரில் குவாரிக்கு எதிராக போராடிய ஜெகநாதன் கொலை – மேலும் ஒருவர் மீது குண்டாஸ் பாய்ந்தது
  75. ஊத்தங்கரை அருகே திருப்பத்தூர் நகர பாஜக துணைத்தலைவர் கலி கண்ணன் வெட்டிக் கொலை
  76. மோசடி மன்னன் வில்லிவாக்கம் முத்துவேலுக்கு உடந்தை – பெண் காவலர் அஜ்மோல் சஸ்பெண்ட்
  77. திருப்பத்தூர்: மனைவி உடலை புதைக்க தோண்டிய குழியில் இறங்கி கணவன் பூஜை செய்ததால் பரபரப்பு
  78. சென்னையில் ஓடும் பேருந்தில் கைவரிசை – ஆந்திராவை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் கைது
  79. எழும்பூரில் தனியார் நிறுவன ஊழியரிடம் ₹25,000 பறித்த ஊர்க்காவல் படை வீரர் கைது
  80. புதுச்சேரி: திருவண்டார்கோயில் அரசு பெண்கள் பள்ளியில் கணினி, பொருட்களை திருடிய 2 பேர் கைது
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments