இராமநாதபுரத்தில் அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக்கழக சி.ஐ. டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்கத்தின் மண்டலத் தலைவர் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மண்டலத் தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். பொருளாளர் கணேசன், துணைத்தலைவர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். 2013- ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரை பணிபுரிந்த தொழிலாளர்களைப்பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
கோரிக்கைகளை வலியுறுத்தினர்
பொது விநியோகத் திட்டத்தைப் பலப்படுத்த வேண்டும். நியாய விலைக் கடைகளுக்கு பொருள்களை எடை குறைவில்லாமல் அனுப்புவதை உறுதி செய்ய வேண்டும் என்பன பேசினர்.கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.சங்கத்தின் மாநில துணைப்பொதுச்செயலாளர் சண்முகம், சி.ஐ.டி.யு. ,மாவட்டச் செயலாளர் சிவாஜி, மண்டலச் செயலாளர் எம்.பழனி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தினர்
மாவட்ட நிர்வாகிகள் சுடலைகாசி பாஸ்கரன், மணிக்கண்ணு, ராகுல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மண்டல துணைச்செயலாளர் சுரேஷ் நன்றி கூறினார்.