மனித உடலுக்கு மருந்தாகும் நாட்டு மருத்துவம்
- வாய் துர்நாற்றம்
எலுமிச்சை பழத்தில் சாறு எடுத்து அதில் உப்பு சேர்த்து தினந்தோறும் குடித்து வர, அதேபோல் தினந்தோறும் எழுந்தவுடன் காலையில் வாயை கொப்பளித்து வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கும்
- முடி வெளியேறி
வயிற்றுக்குள் விழுங்கிய முடி வெளியேற வாழைப்பழம் அல்லது வெற்றிலையில் ஒரு நெல்லை எடுத்து வைத்து விழுங்கினால் முடி வெளியேறி பேதி உடனடியாக நிற்கும்.
- வேனல் கட்டி
வெள்ளைப் பூண்டை நசுக்கி சிறிது சுண்ணாம்பு கலந்து வேனல் கட்டி மீது தொடர்ந்து தடவி வந்தால் வேனல் கட்டி உடைந்து மூன்று நாட்களுக்குள் சரியாகிவிடும்.
- முடி வளர
நன்கு முடி வளர கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி அடர்த்தியாக வளரும்.அத்துடன் தலையும் குளிர்ச்சியாகும்.
- முடி உதிராது
சிறிய வெங்காயத்தின் சாறை எடுத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்தால் முடி உதிராது. முட்டை வெள்ளை கருவை தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து சியக்காய் போட்டுக் குளித்தால் தலைமுடி உதிர்வது சுத்தமாக நின்று விடும்.
கசகசாவை பாலில் ஊர வைத்து அரைத்து அத்துடன் பாசிப்பருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நிற்கும்.
கூந்தல் கருமையாக
செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்தால் கூந்தல் கருமையாகும்.
விக்கல்
நான்கு அல்லது ஐந்து தடவை,நன்கு மூச்சை இழுத்து விடுங்கள் கொட்டாவி பறந்து போய். 30 வினாடிகள் இரு காது துவாரங்களை விரல்களால் அடைத்து கொள்ளுங்கள் தீராத விக்கல் நின்று போகும்.ஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்கு சர்க்கரையை வாயில் போட்டு சுவையுங்கள் பறந்து போகும் விக்கல்.
உடல் புத்துணர்ச்சி
குளிக்கும் போது நீங்கள் குளிக்கும் தண்ணீரில் ஒரே ஒரு தக்காளிப் பழத்தின் சாற்றினை கலந்து பிறகு குளிக்க உடல் புத்துணர்ச்சி பெறும்.