குதக்கோட்டை கிராமத்தில் பயிர்கழிவு மேலாண்மை குறித்த விவசாயிகள் பயிற்சி.
இராமநாதபுரம் மாவட்டம்,திருப்புல்லாணி வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங்களில் ஒன்றான குதக்கோட்டை கிராமத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (2022 – 2023) திட்டத்தின் கீழ் பயிர் அழிவு மேலாண்மை குறித்த மாவட்டத்திற்குள்ளான விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது.
விவசாயிகளுக்கு பயிற்சி
இப்பயிற்சிக்கு இராமநாதபுரம் வேளாண்மை அறிவில் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர்.வள்ளல் கண்ணன் தலைமை வகித்து திருப்புல்லாணி வட்டாரத்தில் சாகுபடியாகும் தென்னை, நெல்,பருத்தி, நிலக்கடலை, உளுந்து மற்றும் தட்டைபயிர்களில் கிடைக்கும் பயிர்கழிவு மற்றும் அந்த பயிர் கழிவுகளை எப்படி உரமாக மாற்றி விவசாயத்திற்கு பயன்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார். மண்ணியல் பேராசிரியர் முனைவர்.பாலாஜி பண்ணைக்கழிவுகள் மற்றும் பயிர் கழிவுகளை மக்கவைத்து இயற்கை உரமாக்கும் முறை பற்றியும், அக்கழிவுகளை மறு சுழற்சி செய்து நிலத்தில் இடும்போத மண்ணில் கார்பன்,நைட்ரஜன் சத்து அதிக அளவில் கிடைக்கும் என்பது குறித்தும் விளக்கினார்.
உரம் தயாரிப்பு
மேலும் மண்புழு உரம் தயாரிப்பு.அசோலா வளர்ப்புபோன்ற உரங்களை இடுவதால் மண்ணில் ஏற்படும்,சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் வீதம் ஆ கியவை குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கினார்.இப்பயிற்சியில் திருப்புல்லாணிவட்டாரதொழில்நுட்பமேலாளர் ரெங்கநாதன் அவர்களால் விவசாயிகளுக்கு ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரிக்கும் தொழில்நுட்பம் பற்றி செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
பயிற்சியல் கலந்துகொண்ட விவசாயிகளுக்கு பயிர் கழிவு மேலாண்மை முறைகள் குறித்த துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது.உதவி வேளாண்மை அலுவலர் தவமுருகன் நெல் பயிரில் பயிர் காப்பீடு செய்யும் வழிமுறைகள் மற்றும் கடைசி தேதி ஆகிவற்றை பற்றி விளக்கினர். பயிற்சிக்காக ஏற்பாடுகளை திருப்புல்லாணி உதவி தொழில் நுட்ப மேலாளர் சேகர் சிறப்பாக செய்திருந்தார்.