Monday, October 2, 2023
Homeதமிழ்நாடுபோக்குவரத்து துறை வேலைவாய்ப்பு

போக்குவரத்து துறை வேலைவாய்ப்பு

கும்பகோணம் 174, சேலம் 254, கோவை 60, மதுரை 136, நெல்லை 188 என 5 கோட்டங்களில் 812 பேர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கும்பகோணம், சேலம், கோவை, மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய 5 போக்குவரத்துக் கழகங்களில் 812 டிசிசி (Driver cum Conductor) பணியாளர்களை நியமிக்க தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக போக்குவரத்துத் துறைச் செயலர் க.பணீந்திர ரெட்டி பிறப்பித்த அரசாணையில் கூறியிருப்பதாவது: கும்பகோணம் (291), சேலம் (423), கோவை (60), மதுரை (272), திருநெல்வேலி (376) ஆகிய போக்குவரத்துக் கழகங்களில் 1422 நடத்துநர் காலிப்பணியிடங்கள் இருப்பதாக போக்குவரத்துத் துறை தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக போக்குவரத்துத் துறைச் செயலர் க.பணீந்திர ரெட்டி பிறப்பித்த அரசாணையில் கூறியிருப்பதாவது: கும்பகோணம் (291), சேலம் (423), கோவை (60), மதுரை (272), திருநெல்வேலி (376) ஆகிய போக்குவரத்துக் கழகங்களில் 1422 நடத்துநர் காலிப்பணியிடங்கள் இருப்பதாக போக்குவரத்துத் துறை தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக போக்குவரத்துத் துறைச் செயலர், போக்குவரத்து துறையின் மூத்த நிதி அலுவலர் ஆகியோருடன் நிதித்துறைச் செயலர் நடத்திய கூட்டத்தில், கும்பகோணம், சேலம், கோவை ஆகிய போக்குவரத்துக் கழகங்களில் 60 சதவீத நடத்துநர் காலிப்பணியிடங்களையும், மதுரை, திருநெல்வேலி ஆகிய போக்குவரத்துக் கழகங்களில் 50 சதவீத நடத்துநர் காலிப்பணியிடங்களை நிரப்பலாம் என முடிவு செய்யப்பட்டது.

அதேநேரம், ஓட்டுநர், நடத்துநர் பிரிவில் ஏராளமான காலிப்பணியிடங்கள் உள்ளன. இதில் யாராவது ஒருவர் விடுப்பு எடுத்துக் கொண்டாலும், பேருந்துகளை இயக்க முடியாத சூழல் உள்ளது. எனவே, விரைவு போக்குவரத்துக் கழகத்தில் உள்ளதைப் போல ஓட்டுநர், நடத்துநர் ஆகிய பணிகளை ஒரு சேர மேற்கொள்ளும் டிசிசி பணியாளர்களை நியமிப்பதன் மூலம் பேருந்துகளை சீராக இயக்க முடியும். ஏராளமான காலிப்பணியிடங்களை டிசிசி பணியாளர்களை தேர்வு செய்வதன் மூலம் போக்குவரத்துக் கழகங்களால் சமாளிக்கவும் முடியும். எனவே, இதர போக்குவரத்துக் கழகங்களிலும் டிசிசி பணியாளர்களை நியமிக்கலாம் என கடந்த ஆண்டு தலைமைச் செயலர் தலைமையில் நடைபெற்ற செயலாளர்கள் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

ஓட்டுநர் உடன் நடத்துனர் (Driver cum conductor) பணியிடங்களுக்கான தகுதிகள்

10ஆம் வகுப்பு தேர்ச்சியடைந்திருக்க வேண்டும். தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

கனரக வாகனங்களை ஓட்டுவதற்கான தகுதியான லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும். கனரக வாகனம் ஓட்டுவதில் 18 மாதங்கள் அனுபவம் கண்டிப்பாக வேண்டும். அதுதவிர நடத்துனர் லைசென்ஸ் இருக்க வேண்டும்.

சம்பள விவரம்

ஓட்டுநர் உடன் நடத்துனர் (Driver cum conductor) பணியிடங்களுக்கான ஊதியமாக ரூ.17,700 முதல் ரூ.56,200 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments