Tuesday, October 3, 2023
Homeராமநாதபுரம்பரமக்குடி தாலுகா அலுவலகத்தில் பழங்குடியினர் சான்று சிறப்பு முகாம் 

பரமக்குடி தாலுகா அலுவலகத்தில் பழங்குடியினர் சான்று சிறப்பு முகாம் 

பரமக்குடி தாலுகா அலுவலகத்தில் பழங்குடியினர் சான்று பெறுவதற்கு ஆவணங்களை மாற்றுவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.

பரமக்குடி அருகே வைகை நகர், லீலாவதி நகர், வேந்தோணி உள்ளிட்ட பகுதிகளில் நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்டவை இல்லாததால் ஜாதி சான்றிதழ் பெறுவதில் மிகவும் சிரமம் பெற்றனர். இதனை அடுத்து நரிக்குறவர் இன மக்கள் பழங்குடியினர் ( ST ) என சாதி சான்றிதழ் பெறுவதற்கு ஆவணங்களை மாற்றுவதற்கான சிறப்பு முகாம் பரமக்குடி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது‌. தாசில்தார் ரவி தலைமை வகித்தார்.

இதில் 100-க்கும் மேற்பட்ட பழங்குடியின சமுதாயத்தை சேர்ந்த மக்கள் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை உள்ளிட்டவற்றில் மாற்றம் செய்வதற்காக தங்களது ஆவணங்களை சமர்ப்பித்தனர். இவர்களுக்கு பழங்குடியினர் சான்றிதழ் கிடைப்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சிறப்பு முகாமில் வட்ட வழங்கல் அலுவலர் சம்பத், மண்டல தாசில்தார் அமர்நாத் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments