திருநங்கைகளை கொடூரமாக தாக்கிய இருவர் கைது
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலையை சேர்ந்த திருநங்கைகள் அனன்யா, மகேஷ் ஆகிய இருவரும் கடந்த மாதம் 7ஆம் தேதி துலுக்கர்பட்டியில் இருந்து கெச்சிலாபுரத்துக்கு டூவீலரில் சென்று கொண்டிருந்த போது இரண்டு பேரையும் கடத்திச் சென்று கடுமையாகத் தாக்கி தலைமுடியை அறுத்துள்ளனர்.
வீடியோ – சமூக வலைத்தளம்
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வந்தது. இதுதொடர்பாக காவல்நிலையத்தில் திருநங்கைகள் புகார் அளித்தனர். இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை பகுதியை சேர்ந்த விஜய்(23), நோபா யூபன்(19) ஆகிய இருவரையும் கழுகுமலை போலீசார் கைது செய்தனர்.
வழக்கு – 5 பிரிவுகள்
இவர்கள் மீது திருநங்கைகள் பாதுகாப்பு சட்டம், ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல், ஆயுதம் கொண்டு தாக்குதல், முறையற்ற தடுத்தல் ஆகிய 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடிவந்த நிலையில் நேற்று கைது செய்துள்ளனர்.