லாரி மீது இருசக்கர வாகனம் மோதி ஒருவர் காயம்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சேதுபதி நகர் பகுதியை சேர்ந்தவர் தேவி. இவர் சத்திரக்குடியில் இருந்து பரமக்குடி நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சத்திரக்குடி வாசன் பள்ளி அருகே சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனம் செல்லும் ட்ராக்கில் இருட்டான இடத்தில் எந்தவித சிக்னலும் போடாமல் மதுரையை சேர்ந்த குணசேகரன் என்பவர் லாரியை அஜாக்கிரதையாகவும் மெத்தனமாக நிறுத்தி சென்று உள்ளார்.
லாரி மீது தேவி எதிர்பாராத விதமாக பின்னால் மோதி உள்ளார். மோதியதில் தேவிக்கு காயம் ஏற்பட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். லாரியை நிறுத்திய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி தேவி கொடுத்த புகாரின் பேரில் சத்திரக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.