தளபதி விஜய்யுடன் டிஸ்டன்ஸ் மெயின்டைன் பண்ணும் உதயநிதி ஸ்டாலின் !
சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட உதயநிதியிடம், பேசும்போது விஜய்யுடன் டிஸ்டன்ஸ் மெயின்டைன் பண்றேன்னு சொன்னீங்க அதற்கு என்ன காரணம் என்று கேள்வி கேட்கபட்டது.
உதயநிதி அளித்த பதில்
அதற்கு டிஸ்டன்ஸ் என்றால் சேஃப் டிஸ்டன்ஸ் தான் என்று புன்னகைத்து தளபதி விஜய்யை பார்த்து வெகு நாட்கள் ஆனதென்றும் கடந்த புத்தாண்டு அன்று பார்த்தது, வழக்கமாக அவர் யாரிடமும் அவ்வளவு நெருக்கமாக இருக்க மாட்டார். நண்பராகி விட்டால் மிகவும் நெருக்கமாகிவிடுவார். என்னிடம் மிகவும் நெறுக்கமாக இருந்தார். இடையில் சில தவறான புரிதல் காரணமாக என்னைப் பற்றி அவரிடமும் அவரைப் பற்றி என்னிடமும் சிலர் தவறான விஷயங்களை கூறியதால் இருவரிடையே இடைவேளை ஏற்பட்டது. பிறகு நானே அவரிடம் நடந்தவற்றை கூறி புரியவைத்து, பிறகு இருவரும் நன்றாக பேசுகிறோம். அடிக்கடி போனில் பேசிக்கொள்வோம் அவரும் தொடர்ந்து பிஸியாக பல படங்களில் நடித்து வருகிறார். அடிக்கடி விருந்துக்கும் என்னை அழைப்பார். இவ்வாறு நேர்காணலில் தளபதி விஜய் பற்றிய கேள்விகளுக்கு பதில் அளித்தார்.