பரமக்குடியில் மாற்றுத்திறனாளிக்கு குடை வழங்கும் விழா.
பரமக்குடி “பசுமை வைகை இயக்கம்” சார்பாக சாலையோரமாக திறந்த வெளியில் அமர்ந்து அக்கினி நட்சத்திர வெயிலில் வேலை பார்க்கும் டோபி மாற்றுத் திறனாளி நாகராஜனுக்கு நிழல் குடையை அறங்காவலர் மரங்கள் முருகேசன் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் வழக்கறிஞர் இராஜேந்திரன், பீட்டர் வளவன், நாணல் சுரேஷ் கண்ணன், கோபாலகிருஷ்ணன், சரவணன், குமார், அப்துல் கரீம், காரிச்சாமி, காசி ஆகியோர் கலந்து கொண்டு பசுமை இயக்கத்தின் பணிகளுக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர். மணல் சிற்பக் கலைஞர் சரவணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
இதையும் படியுங்கள் || நீதிபதிகள் அரசு ஊழியர்களிடம் சரமாரி கேள்வி