பரமக்குடியில் ஒன்றிய அளவிலான ‘துளிர்’ வினாடி வினா போட்டி
ராமநாதபுரம் மாவட்ட அறிவியல இயக்கத்தின் சார்பில் பரமக்குடி கீழ முஸ்லீம் மேல்நிலைப் பள்ளியில் ஒன்றிய அளவிலான துளிர் வினாடி வினா போட்டி நடந்தது. இப்போட்டிக்கு கீழ முஸ்லீம் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் முனைவர் எம்.அஜ்மல்கான் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். அறிவியல் இயக்க பொறுப்பாளர் காந்தி முன்னிலை வகித்தார்.
ஒன்றிய அளவில்
ஒன்றிய அளவில் 6,7,8 ம் வகுப்பு, 9,10 ம் வகுப்பு, 11,12 ம் வகுப்பு ஆகிய 3 நிலைகளாக நடந்த போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டியின் நடுவர்களாக ஆசிரியைகள் குணப்பிரியா, இந்துமதி,பானுமதி, ஆசிரியர்கள் ஜான்தால், சேசு ரெத்தினம், ஜோசப் வில்லியம் ஆகியோர் பொறுப்பேற்று நடத்தினர்.
பதக்கம், சான்றிதழ்
போட்டியில் வெற்றி பெற்ற 27 மாணவ – மாணவிகளுக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கி பாராட்டப் பட்டனர். வெற்றி பெற்ற மாணவ – மாணவிகள் நவம்பர் மாதம் ராமநாதபுரத்தில் நடக்கும் மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொள்கின்றனர். அறிவியல் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஆசிரியை நிர்மலா நன்றி கூறினார்.