வாழையிலையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, தண்ணீரில் கொதிக்க வைக்கவும். பிறகு அந்த இலையை நீக்கி விட்டு தண்ணீரை அருந்தி வந்தால் கொலஸ்ட்ரால் குறையும்.
பாதாம், பிஸ்தா பருப்புகளுக்கு இணையாக நிலக்கடலையிலும் அபரிதமான சத்துக்கள் நிறைந்துள்ளன. இது இதயத்தை பலப்படுத்துகிறது. நிலக்கடலையை அடிக்கடி எடுத்துக் கொள்வதால் பெண்களுக்கு நீர்க்கட்டிகள், கருப்பை கட்டிகள் ஏற்படுவதில்லை. பெண்களின் ஹார்மோன் வளர்ச்சியை சீராக வைக்கிறது.
அவரையில் இருக்கும் வைட்டமின் பி-1 இதயச் செயலிழப்பைக் குறைக்கிறது. உடல் பருமனைக் குறைக்க அவரைக் காயை அடிக்கடி சாப்பிடுவது நல்லது.
ரோஜா இதழ்களை மென்று தின்றால் வாய்ப்புண் குணமாகும். அரைத்து அதனுடன் தேன் கலந்து கொண்டு முகத்தில் தடவி வந்தால் முகம் பளபளப்பாகவும் இருக்கும்.
கறிவேப்பிலையை தினமும் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிட்டு வந்தால் தலைமுடி வளர்ச்சி அதிகரிக்கும். முடி கொட்டுவது நிற்கும். கருமையாகவும் வளரும்.
முருங்கைக்கீரையை நெய்யில் வதக்கி, மிளகு,சீரகப்பொடி சேர்த்து தினமும் காலை யில் சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.
சிறிதளவு கருஞ்சீரகத்தை எடுத்து அரைத்து நல்லெண்ணெயில் குழைத்து பூசினால் சிரங்கு, கரப்பான் நீங்கும்.
வீட்டை சுத்தம் செய்வதற்கு எலுமிச்சை பழம், சர்க்கரை, உப்பு, வினிகர் மற்றும் பேக்கிங் சோடா மாவைத்தான் பயன்படுத்துவோம். இந்த பொருட்களை சமையலில் பயன்படுவது மட்டுமின்றி, சுத்தப்படுத்தவும் உதவியாக உள்ளன.