Tuesday, June 6, 2023
Homeஆன்மிகம்கோவில்களில் தீப எண்ணெய், தீபம் ஏற்றும் திசைகள், திரிகளின் பயன்கள் பற்றி அறிவோம்:

கோவில்களில் தீப எண்ணெய், தீபம் ஏற்றும் திசைகள், திரிகளின் பயன்கள் பற்றி அறிவோம்:

கோவில்களில் தீப எண்ணெய், தீபம் ஏற்றும் திசைகள், திரிகளின் பயன்கள் பற்றி அறிவோம்:

சுத்தமான பசுநெய் – செல்வம் பெருகும்.

நல்லெண்ணெய் – பிணி, பீடை ஒளிந்து ஓடிவிடும்.

விளக்க எண்ணெய் – துன்பங்கள் நீங்கும்.

ஆமணக்கு எண்ணெய் – தாம்பத்யம் பிறக்கும்.

இலுப்பை எண்ணெய் – பூஜிப்பவருக்கும், பூஜிகப்படும் இடத்துக்கும் விருத்தி உண்டு.

கடலை எண்ணெய் மட்டும் பயன்படுத்தவே கூடாது.

தீபம் ஏற்றும் திசைகள்:

கிழக்கு நோக்கி தீபம் ஏற்றினால் – துன்பங்கள் நீங்கி இன்பம் உண்டாகும்.

மேற்கு நோக்கி தீபம் ஏற்றினால் – கடன் தொல்லை தீரும்.

தெற்கு நோக்கி தீபம் ஏற்றினால் – பாவம், அபசகுனம், எமனுக்குப் பிரீதி.

வடக்கு நோக்கி தீபம் ஏற்றினால் – வேலை வாய்ப்பு தடை, திருமண தடை, சுபகாரிய தடை நீங்கி செல்வம் பெருகும். சுபகாரியங்கள் நடைபெறும்.

விளக்கு துலக்க வேண்டிய நாட்கள் அதன் பயன்கள்:

குத்துவிளக்கை ஞாயிறு, திங்கள், வியாழன், சனி ஆகிய நாட்களில் விளக்கு துலக்குவது மிகவும் நல்லது.

ஞாயிறு – கண் சம்பந்தமான நோய் தீரும்.

திங்கள் – மனம் அடங்கி அமைதி பெறும்.

வியாழன் – மனச்சோர்வு, மனக்கவலை தீரும்.

சனி – வாகன விபத்துகள் ஏற்படாமல் நம்மைக் காக்கும்.

செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் துலக்குவதை விட இந்நாட்கள் அதிக பலன்களை தரக்கூடியவை. இதற்கு ஒரு காரணமும் உண்டு.

திருவிளக்கில் திங்கள் நள்ளிரவு முதல் புதன் நள்ளிரவு வரையில் தனயட்சணி குடியிருக்கிறாள். எனவே செவ்வாய், புதன் கிழமைகளில் விளக்கை கழுவினால் இவள் வெளியேறி விடுவாள். என்பதால் அந்நாட்களில் கழுவக்கூடாது.

திரிகளின் பயன்கள்:

குத்துவிளக்கிற்கு பயன்படுத்தும் எண்ணெயை பொறுத்து பலன்கள் வேறுபடுவதைப் போல, திரிகளாலும் பயன்கள் மாறுபடுகின்றன.

பருத்தி பஞ்சு திரி – குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும்.

வாழைத்தண்டு நார் திரி – முன்னோர் சாபம், தெய்வ குற்றங்கள் நீங்கும்.

தாமரைத்தண்டு நூல் திரி – முன்வினைப் பாவங்கள் நீங்கும்.

வெள்ளை எருக்கம்பட்டை திரி – செல்வம் பெருகும்.

புதிய மஞ்சள் துணி திரி – அம்பாளின் அருளால் நோய்கள் குணமாகும்.

சிவப்பு வண்ண துணி திரி – குழந்தையின்மை தோஷம் நீங்கி, குழந்தை பிறக்கும்.

வெள்ளை துணி திரி – துணியின் மீது பன்னீர் தெளித்து காயவைத்து பின்பு திரியாக்கி விளக்கு ஏற்றி வந்தால் நற்பலன்களை தரும்.

 

இதையும் படியுங்கள் || பழைய கஞ்சி உடலுக்கு குளிர்ச்சியா – சாப்பிட்டு பாருங்க மக்களே

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments