ராஜமவுலி இயக்கிய ‘ஆர்ஆர்ஆர்’ படத்துக்கு இசையமைத்த கீரவாணி அதில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருதையும் வென்றார். தற்போது தமிழில் ஜென்டில்மேன் 2-ம்பாகம் படத்துக்கு இசையமைக்கிறார்.இந்த படத்தை குஞ்சுமோன் தயாரிக்கிறார். வைர முத்து பாடல்களை எழுதுகிறார். பாடல் இசை கோர்ப்பு பணிகள் கொச்சியில் உள்ள உலக புகழ்பெற்ற போல்காட்டி மாளிகையில் தொடங்கி உள்ளது. அங்கு வந்த கீரவாணிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
‘கீரவாணியுடன் எடுத்துக்கொண்ட புகைப் படத்தை வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு, “கொச்சியில் இருக்கிறேன். ஜென் டில்மேன் 2 படத்திற்கு பாட்டெழுதுகிறேன். ஆஸ்கர் விருதுக்கு பிறகு கீரவாணி (மரகத மணி) இசையமைக்கும் முதல் தமிழ் படம். அதி காலை பறவைகளாய் பாடிக்கொண்டிருக்கி றோம். கோகுல் கிருஷ்ணா இயக்குகிறார். குஞ்சுமோன் படத்துக்கு குறையிருக்குமா பாட்டுக்கு? விரைவில் அர்ப்பணிக்கிறோம் என்றார் வைரமுத்து.