1960ல் நடக்கும் கதை வாடிவாசல் வெற்றிமாறன் தகவல் சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் என்ற படம், கடந்த 1960ல் நடக்கும் கதையாக உருவாகிறது.பொல்லாதவன், ஆடுகளம் விசாரணை, வட சென்னை, அகரன் படங்களை இயக்கியவர். வெற்றிமாறன். இப்போது பேட்டைக்காளி என்ற வெப்சீரிஸை தயாரித்துள்ளார். இந்த வெப்ரீரிஸ் சமீபத்தில் ஓடிடியில் வெளியானது. இதில் ஜல்லிக்கட்டு பின்னணி இடம்பெற்றுள்ளது. வாடிவாசலும் ஜல்லிக்கட்டு பின்னணியில் உருவாகும் படம்தான்.
இதுகுறித்து வெற்றிமாறன் கூறியதாவது:
நீர்வல்களை படமாக்குவது பிடிந் திருக்கிறது. அந்த வகையில் நாவலை விசாரணை பெயரில் இயக்கினேன். பூமணியின் வெக்கை நாவலை அசுரன் என்று படமாக்கினேன். இப்போது சி.சு.செல்லப்பா வின் வாடிவாசலை அதே பெயரில் படமாக்குகிறேன். தாணு தயாரிக்க. ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். பேட்டைக்காளி தொடரில் ஜல்லிக்கட்டு பின்னணி இருந்தாலும்,அந்த கதை வேறு. வாடிவாசல் கதை வேறு பேட்டைக்காளி இப்போது நடக்கும் கதை ஆனால், வாடிவாசல் சுடந்த 1960களில் நடக்கும் கதையாக உருவாகிறது.