ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சமூக நலத்துறையின் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையேற்று விழிப்புணர்வு குறித்த கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்து திருநங்கையர்களால் வடிவமைக்கப்பட்ட ரங்கோலியினை பார்வையிட்டார்.
விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
தொடர்ந்து முஹம்மது சதக் தஸ்தகீர் கல்வியல் கல்லூரியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு குறித்த விழிப்புணர்வு தொடர்பான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று விழிப்புணர்வு குறித்து தெரிந்து கொண்டனர்.
அதிகாரிகள் பங்கேற்பு
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயண சர்மா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சேக் மன்சூர், மாவட்ட சமூக நல அலுவலர் சாந்தி, மகிளா சக்தி கேந்திரா மகளிர் நல அலுவலர் மங்கையர்கரசி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.