பரமக்குடி சிங்காரத்தோப்பில் நடைபெற்ற வார்டு சபா கூட்டம்
பரமக்குடி சிங்காரத்தோப்பு என்ற பகுதியில் கருப்பணசாமி கோவில் முன்பு வார்டு சபா கூட்டம் நடைபெற்றது அக்கூட்டத்தில் உறுப்பினர்கள், மற்றும்அதிகாரிகள் பங்கேற்பு.
அதிகாரிகள் முன்னிலையில்
பரமக்குடி நகராட்சி 23வது வார்டில் வார்டு சபா கூட்டம் நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது.
கிராமங்களை போன்று நகர்பகுதிகளால் வார்டு சபா கூட்டம் நடத்த தமிழக முதல்வர் உத்தரவு பிறப்பித்தார். இதனை அடுத்து தமிழகத்தில் உள்ள நகராட்சி, மாநகராட்சியில் உள்ள வார்டுகளில் வார்டு சபா கூட்டம் நடைபெற்று வருகிறது.
வார்டில் உள்ள பிரச்சனைகள்
பரமக்குடி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இதில் 23-வது வார்டு சார்பில் வார்டு சபா கூட்டம் நகர்மன்ற உறுப்பினர் பாக்கியம் தலைமையில் சிங்காரத்தோப்பு கருப்பணசாமி கோவில் முன்பு நடைபெற்றது.
இதில் வார்டில் உள்ள பிரச்சனைகள், அடிப்படை தேவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் நகர்மன்ற துணைத் தலைவர் குணா மற்றும் நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.