கமுதி பெரிய கண்மாயிலிருந்து செட்டி ஊருணிக்கு தண்ணீர் திறத்து விடப்பட்டது
கமுதி பெரிய கண்மாயிலிருந்து செட்டி ஊருணிக்கு தண்ணீர் கொண்டு வர பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
நீர் நிரம்பி உள்ள கண்மாய்
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பேரூராட்சிக்குள்பட்ட செட்டி ஊருணி பொதுமக்களின் முக்கிய நீராதாரமாக உள்ளது. இந்த நிலையில், கமுதி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பரவலாக பெய்து வரும் மழையின் காரணமாக, கமுதி பெரிய கண்மாய்க்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.இந்த நிலையில், கமுதி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பரவலாக பெய்து வரும் மழையின் காரணமாக, கமுதி பெரிய கண்மாய்க்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
அப்பகுதி மக்களின மகிழ்ச்சி
இதைத்தொடர்ந்து, பேரூராட்சித் தலைவர் அப்துல்வஹாப் சஹா ராணி, செயல் அலுவலர் இளவரசி தலைமையில், பேரூராட்சி ஊழியர்கள்பெரிய கண்மாய் இருந்து செட்டி ஊருணிக்கரை வரை கால்வாயை தூர்வாரி தண்ணீர் திறந்து விட்டனர். இதனால் ஊருணிக்கரையில் அமைக்கப் பட்டுள்ள ஆழ்துளைக் கிணறுகளில் நீர் மட்டம் உயர்ந்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.