ஜலதோஷத்தைப் போக்க வழிமுறைகள்:
- வெற்றிலையை நன்றாக இடித்து சாறு எடுத்து அதில் தேன் கலந்து தொடர்ந்து குடித்து வந்தால் இருமல் பறந்து போய்விடும்.
- கற்பூரவள்ளி இலையை சுடு நீரில் நன்றாக வேக வைத்து குடித்து வந்தால் சளித்தொல்லை நீங்கிவிடும்.
- ஒரிஜினல் மாட்டுப் பாலை நன்றாக கொதிக்கவைத்து அதில் தேன் கலந்து குடித்து வந்தால் சளி, இருமல் தொல்லை நீங்கிவிடும்.
- சின்ன வெங்காயத்தை தீயில் சுட்டு சாப்பிட்டு வந்தால் சளி, இருமல் தொல்லை இருக்காது.
- தினமும் ஒரு டம்ளர் அன்னாசிச்சாறுடன் மிளகுத்தூள் சேர்த்து அருந்தி வந்தால் உடல் சோர்வு மறையும் சளித்தொல்லை குணமாகும்.
- தேன் மற்றும் உப்பு ஆகியவற்றை ஒரு டம்ளர் ஆரஞ்சு ஜூஸில் கலந்து குடித்து வந்தால் சளி, இருமல், தொண்டை வலி பறந்து ஓடிவிடும்.
- கொய்யா பழத்தோடு மிளகுத்தூள் தொட்டு சாப்பிட்டு வந்தால் நுரையீரலில் உள்ள சளி வெளியேறி விடும்.
இதையும் படியுங்கள் || உருளைக்கிழங்கின் மருத்துவ பயன்கள்