- உருளைக்கிழங்கை தோல் நீக்கி விழு தாக அரைத்து, அதன் சாறை எடுத்து தட வினால் கண்கள் கருவளையம் நீங்குவதோடு, கருமை நீங்கி சருமம் பளபளக்கும்.
- கற்றாழை ஜெல் எடுத்து கண் களைச் சுற்றி உள்ள தசைகளை மெது வாக வட்டவடிவில் மசாஜ் செய்தாலும் நீங்கும்.
- ஈகுளிப்பதற்கு முன் சிறிது ஆலிவ் ஆயில் அல்லது பேபி ஆயில் அல்லது விளக்கெண்ணெய் கொண்டு கண்களைச் சுற்றி மெதுவாக மசாஜ் செய்து வர கண்களின் சோர்வு நீங்கி புத்துணர்ச்சியான சருமம் பெறுவதோடு கருவளையமும் மறையும்.
- வெள்ளரிக்காய் சாறை கண்களைச் சுற்றி தடவி வந்தால் சோர்வு நீங்கி குளிர்ச்சியும், புத்துணர்ச்சியும் சருமத்தில் சேரும். மேலும் கருமை நீங்கும்.
- தயிர், கஸ்தூரி மஞ்சள், தூய சந்தனம் இவற்றை நன்கு பேஸ்ட்டாக்கி தினமும் கண்களின் கீழ்ப் பகுதியில் பூசி 15 நிமிடங் கள் ஊறவைத்து கழுவி வந்தால் 2 மாதங்களில்கருவளையம் மறையும்.
- பாதாமை சிறிது பாலுடன் சேர்த்து பேஸ்ட் செய்து கருவளையம் உள்ள இடத்தில் தடவி 10 நிமிடம் கழித்து
- கழுவினால் கருவளையம் நீங்கும். கேரட்டை சாறு எடுத்து தடவி வந்தாலும் கருமை நிறம் மாறும். அவித்த முட்டையை வட்ட வடிவில் வெட்டி கண்களில் வைத்து,
- ஒரு ரிப்பன் அல்லது துணியால் கட்டிக் கொண்டு 30 நிமிடங்கள் வரைக் காத்திருந்து எடுக்க முட்டை உடல் சூட்டை அப்படியே எடுத்துக்கொள்ளும். இதனால் கண்களுடன் இணைந்து உடலும் குளிச்சி அடையும்.
- ” குறைந்தது 6 மணிநேரம் நல்ல தூக்கம், உடன் நிறைய தண்ணீர் அருந்தும் பழக்கமும் கூட கருவளையப் பிரச்னையை சரி செய்யும்.
- கணினி. மொபைல் என மணிக்கணக்கில் பயன்படுத்து வோர் அவ்வப்போது கண்களுக்கு ஓய்வு கொடுப்பதோடு கண்களுக்கான சில பயிற்சிகளையும் கொடுக்கலாம்.
கண் கருவளையம் பிரச்சனை நீக்க வழிகள்
RELATED ARTICLES