- பிரியாணி, பாயசம் ,ஸ்வீட்கள் உள்ளிட்ட பல உணவுகளில் உலர் திராட்சையை அழகிற்காகவும், சுவைக்காகவும் நாம் பயன்படுத்துவதுண்டு.
- ஆனால் நம்மில் பலரும் இந்த உலர்ந்த திராட்சையின் மருத்துவ குணங்களை பற்றி அறிந்திருக்க மாட்டோம்.
- பல எக்கச்சக்கமான மருத்துவ நன்மைகளை கொண்டது தான் இந்த உலர் திராட்சை ஆகும்.
மருத்துவ பயன்கள்
- வெயில் காலம் தொடங்கிவிட்டால், சிலருக்கு முகத்தில் கொப்புளங்கள் வரும். அவர்கள் இதைச் சாப்பிட்டால், கொப்பளங்கள், கட்டிகள் நீங்கும்;
- தோல் நோய்களில் இருந்தும் நம்மை காத்துக்கொள்ள முடியும்; முகமும் பொலிவு பெறும்.
- ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் உலர் திராட்சையை சாப்பிட்டு வந்தால் ரத்தசோகை குணமாகுவதற்கு வழிவகுக்கும்.
- உடலில் உணவு செரிமானம் எளிதாக நடைபெறுவதற்கு உலர் திராட்சை மிகவும் உதவும்.
- மதிய நேரங்களில் நீங்கள் அதிக அளவில் உணவை சாப்பிடுகிற பட்சத்தில், அதன் பின்னர் சிறிது உலர் திராட்சையை சாப்பிடுவது சிறந்தது.
- இரும்புச்சத்து இதில் அதிகம் உள்ளதால், உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள் தாராளமாக இதைச் சாப்பிடலாம்.
- தினமும் உலர்திராட்சையை சிறிதளவு சாப்பிடுபவர்களின் உடல் எடை வெகு விரைவில் அதிகரிக்கும்.
- உலர் திராட்சையில் பொட்டாசியம் அதிகம் உள்ள காரணத்தினால் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருப்பதற்கு இது மிகவும் உதவுகிறது.
- உங்களின் முடி மற்றும் சருமத்தின் ஆரோக்கியத்திற்கு உலர் திராட்சை மிகவும் உதவும்.
- மஞ்சள் காமாலை நோயிலிருந்து விடுபடுவதற்கும் உலர் திராட்சை உதவுகிறது.
- மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தினந்தோறும் இரண்டு முறை தொடர்ந்து உலர்திராட்சையை சாப்பிட்டு வருவது நல்ல பலனை அளிக்கும்.
- ரத்தத்தை சுத்திகரிக்க உலர் திராட்சைப் பழம் உதவுகிறது.
- மூல நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் உலர்திராட்சையை தொடர்ந்து சாப்பிட்டு வருவது அந்த நோயில் இருந்து விடுபட உதவும்.
- கண்களின் பார்வைத்திறனை அதிகரிக்க உலர் திராட்சையில் உள்ள வைட்டமின் ஏ மிகவும் உதவுகிறது.
- மலச்சிக்கல் பிரச்சனை உலர் திராட்சையை சாப்பிட்டால் சரி ஆகும். உங்களது எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உலர் திராட்சை மிகவும் உதவுகிறது.
- உலர் திராட்சை சாப்பிடுவது உடல் சூட்டை தனிக்கவும் உதவும்.
- எப்பொழுதும் நீங்கள் சுறுசுறுப்பாக இருப்பதற்கு சிறிது உலர்ந்த திராட்சையை தினமும் காலையில் சாப்பிடுவது நல்லது.
- சர்க்கரை நோயாளிகளும் உலர்திராட்சையை தாராளமாகச் சாப்பிடலாம்.
- இதில் நார்ச்சத்தும் இருப்பதால், உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கவும் ரத்தத்தில் உள்ள சர்க்கரையைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கவும் உதவக்கூடியது.
- ஏராளமான பலன்களை அள்ளித்தரும் உலர் திராட்சை எல்லோரும் சாப்பிட ஏற்றது.