ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மேலச்சத்திரம் சிஎஸ்ஐ சர்ச்சில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க வழக்கறிஞர் அணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இவ்விழாவில், ராமநாதபுரம் தி.மு.க மாவட்ட செயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமை தாங்கி ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ராமநாதபுரம் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் கருணாநிதி, போதகர் விஜயகுமார், உதவி போதகர் ஜேசுதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் பேட்டி
தொடர்ந்து பேசியதாவது, “தி.மு.க அரசு மக்களுக்காக செயல்பட்டு வரும் அரசு, பல்வேறு நலத்திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைய வேண்டும் என்பதே கட்சியின் நோக்கம்.
முதல்வர் தலைமையிலான தி.மு.க அரசு சமூகநீதியை மையமாகக் கொண்டு அனைத்து தரப்பு மக்களுக்கும் நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. சமூக சேவை மற்றும் சட்டப்பணிகளில் வழக்கறிஞர் அணியின் பங்கு மிகவும் முக்கியமானது என்றும், பொதுமக்களின் நலனுக்காக தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு – திராவிட அரசு சாதனை
மேலும், கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு அன்பு, சமாதானம், சகோதரத்துவம் போன்ற மதிப்புகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்.
கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட துறைகளில் முன்னெப்போதும் இல்லாத அளவில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. குறிப்பாக ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில் திட்டங்கள் திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அடிப்படை வசதிகள் மேம்பாடு, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, பெண்கள் முன்னேற்றம் ஆகியவற்றில் தி.மு.க தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் மக்களுடன் நேரடி தொடர்பு கொண்டு அரசின் நலத்திட்டங்கள் அவர்களுக்கு முழுமையாக சென்றடைய உறுதி செய்ய வேண்டும்”என பேசினார்.

முக்கிய பிரமுகர்கள்
இவ்விழாவில் எம்.எல்.ஏ முருகேசன், நகர்மன்ற தலைவர் சேது கருணாநிதி, முன்னாள் அமைச்சர் சுந்தரராஜன், ரவிச்சந்திர ராமவன்னி, திசைவீரன், வடக்கு நகர் செயலாளர் ஜீவரத்தினம், ஒன்றிய செயலாளர்கள் குணசேகரன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட கூடுதல் அரசு வழக்கறிஞர் ஜான் ராஜதுரை சிறப்பாக செய்திருந்தார். இதில் தி.மு.க வழக்கறிஞர் அணி நிர்வாகிகள், கட்சி நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.



