லயன்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் நலத்திட்ட உதவிகள்
ராமேசுவரம் மண்டபம் முகாமில் வசித்துவரும் இலங்கைத் தமிழர்களுக்கு லயன்ஸ் இன்டர்நேஷனல் சங்கத்தினர் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. லயன்ஸ் மாவட்ட கவர்னர் மணிவண்ணன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.
ஆட்சியர்கள் கலந்துகொண்டனர்
சிறப்பு அழைப்பாளராக மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமுக்கான துணை ஆட்சியர் சிவகுமாரி, மண்டபம் பேரூராட்சித் தலைவர் ராஜா ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் இலங்கைத் தமிழர்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான வேஷ்டி, சேலை,20-க்கும் மேற்பட்ட மளிகைப் பொருட்கள் அடங்கிய பெட்டகங்கள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன.