நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்
ராமநாதபுரம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பரமக்குடி ராஜீவ் காந்தி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் புத்தாடை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
சங்கத் தலைவர் எம்.ஆர். நாரா யணன் தலைமை வகித்தார். காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு பொறியாளர் கிருஷ்ணராஜு முன்னிலை வகித்தார். விடுதலைப் போராட்ட வீரர்கள் வாரிசுகள் சங்க நிர்வாகி ஹாரிஸ் மற்றும் மகா தேவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சங்க மேலாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.