இளையான்குடியில் மாற்று திறனாளிகளுக்கான நலத்திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி
இளையான்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத் திட்டங்கள் குறித்த தெருமுனை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மாற்றுத் திறனாளிகள் நலவாரிய உறுப்பினர் புஷ்பராஜ் தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏ மதியரசன், பேரூராட்சித் தலைவர் நஜுமுதீன், துணைத் தலைவர் இப்ராஹிம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்டங்கள் ஈறித்து துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.