நகங்கள்
உங்கள் கால்கள், கைவிரல் நகங்கள் சுத்தம் இல்லை என்றால் வயிற்று வலி வயிற்றுப் போக்கு உண்டாகும். கால் நகங்கள், கைவிரல் நகங்களை வெட்டி சுத்தம் செய்ய வேண்டும்.
ஜலதோஷம்
கண்கள் மற்றும் மூக்கில் அடிக்கடி அரிப்பு ஏற்பட்டால் விரைவில் ஜலதோஷம் பிடிக்கப் போகிறது என்று அர்த்தம். எனவே உடனடியாக மருத்துவரை அணுகி சரி செய்ய வேண்டும்.
காய்ச்சல்
காதில் வலியோ, எரிச்சலோ இருந்தால் வெறும் காது பிரச்சினை என்று நினைத்து விடக்கூடாது. ஏனென்றால் விரைவில் காய்ச்சல் வரப்போகிறது என்று அர்த்தம்.
சர்க்கரை நோய்
நமது உடலில் கை, கழுத்து, கால் இடுக்குகளில் கருப்பான பட்டை இருந்தால் கணையத்தில் இன்சுலின் சுரப்பி அதிகமாக இருக்கிறது என்று அர்த்தம். நீரழிவு நோய் இருப்பதற்கு அறிகுறியாகும்.
அதிக பசி
நமது உடலில் இன்சுலின் அதிகமாக சுரந்தால் அதிக அளவில் பசி எடுக்கும். நமது உடலில் ரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதாக அர்த்தம்.
பாதங்கள் வெடிப்பு
உடலில் அதிக அளவில் சூடு இருந்தால் கால் பாதங்களில் வெடிப்பு ஏற்படும். இதனால் உடலை நல்ல நிலைக்குக் கொண்டுவர நல்ல உணவுகளை சாப்பிட வேண்டும்.
மூட்டுவலி
கால், முழங்கால், மூட்டு, மணிக்கட்டு ஆகிய பகுதிகளில் வலி ஏற்பட்டால் உடலில் எடை கூடி உள்ளது என்று அர்த்தம். எனவே உடனடியாக உடல் எடையைக் குறைக்க வழிவகை செய்ய வேண்டும்.
எலும்புத் தேய்மானம்
இடுப்பு, முதுகு தண்டு ஆகிய பகுதிகளில் அதிகமாக வலித்தால் இரண்டு எலும்புகளும் மிருதுவாகி எலும்பு தேய்மானம் ஏற்படுகிறது என்று அர்த்தம்.
உதடு வெடிப்பு
உதட்டின் மேல் தோலில் பிளவு, வெடிப்பு, தோல் உரிதல் ஏற்பட்டால் உடம்பில் நீர்ச்சத்து, எண்ணைப் பசை குறைந்து விட்டது என்று அர்த்தம்.
வாயுத்தொல்லை
குதிங்கால், தோள்பட்டை, முதுகுத்தண்டு, முதுகுத்தாரை ஆகிய உடல் பகுதிகளில் இறுக்கமாகவோ வலியுடனோ இருந்தால் உடலில் காற்றின் அழுத்தம் அதிகமாகி, வாயு தேங்கியுள்ளது என்று அர்த்தம்.
இதயக்கோளாறு
கண்களுக்கு மேல், கை விரல்களில் கருப்பு கோடு விழுந்தால் இதயத்தில் பிரச்சனை ஆரம்பிக்கப் போகிறது என்று அர்த்தம்.
தலைமுடி பிரச்சினை
முகத்தில் அரிப்பு, லேசான எரிச்சல் இருந்தால் தலை முடி சுத்தம் இல்லை என்று அர்த்தம். அதனால் தலையில் பொடுகு உற்பத்தியாகி தலை முடிக்கு தொல்லை கொடுக்கும்.