வாகனங்களில் செல்லும் போது விபத்து ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்
சாலைகளில் செல்லும்போது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டால் அவர்களுக்கு எது மாதிரியான முதல் உதவியைச் செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.
விபத்து ஏற்பட்ட வாகனத்தின் சாவியை அணைக்க வேண்டும்
விபத்து ஏற்பட்ட வாகனத்தின் சாவியை உடனடியாக ஆப் செய்ய வேண்டும். பெட்ரோல் டீசல் செல்லும் வழிகளை அடைக்கவேண்டும்.
ஒருவேளை மனிதர்கள் சக்கரத்தின் அடியில் சிக்கிக்கொண்ட சக்கரத்தின் நான்கு பட்டைகளை வைத்து வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
டீசல் அல்லது பெட்ரோல் கசிந்து இருந்தால் அந்த இடத்தில் தீ பிடிக்க வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமின்றி பெட்ரோல் டேங்க் வெடிக்கவும் வாய்ப்பு இருக்கிறது.
அருகில் இருப்பவர்கள் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை வைத்திருக்கக் கூடாது.
எலும்பு முறிவு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்
விபத்தில் காயம் அடைந்தவரின் உடம்பில் உள்ள எலும்புகள் முறிவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.
அதனால் எலும்பு முறிவு ஏற்பட்டவரை நான்கு பேர் சேர்ந்து தூக்கி மருத்துவனைக்கு கொண்டு சொல்ல வேண்டும்
சுத்தமான துணியின் மேல் படுக்க வைக்க வேண்டும்
விபத்தில் காயம் அடைந்தவரின் தோள்பட்டை, தலை, மார்பு, இடுப்பு, தொடை கைகளுக்கு அடியில் ஒரு கையை கொடுத்து நால்வரும் ஒரே நேரத்தில் தூக்கி துணியில் படுக்க வைக்க வேண்டும்.
பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்
படுகாயம் அடைந்தவரை சம தளத்தில் படுக்கவைத்து நான்கு புறமும் துணியால் கட்டிவிட வேண்டும்.
பாதிக்கப்பட்டவரின் இடது பக்கம் மூன்று நபர்களும் வலது பக்கம் ஒரு நபரும் தலையை கழுத்தையும் தாங்கிப்பிடித்து அசையாமல் நேராகஸ்ட்ரெச்சரில் தூக்கி வைக்க வேண்டும்.
எலும்பு முறிவுக்கான முதலுதவி சிகிச்சைகள்
அடிபட்ட நபர் தானாக வேறு எங்கும் செல்லாதவாறு பார்த்து கொள்ள வேண்டும்.
உடம்பில் எந்த பகுதியில் அதிக காயங்கள் உள்ளதோ அந்தப் பகுதியை அசையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
விபத்தில் அடிபட்டவர் பதற்றமாக இருந்தால் பதற்றத்தை தணிக்கும் வகையில் அவருக்கு ஆறுதல் கூற வேண்டும்.
அடிபட்ட இடத்தை சுத்தமான ஈரத்துணியால் துடைக்க வேண்டும். உடம்பில் இரத்தக் கசிவு இருந்தால் அந்த இடத்தில் துணியை மடித்து காயத்தின் மீது வைத்துக் கட்ட வேண்டும்