Tuesday, April 16, 2024
Homeஅறிந்து கொள்வோம்மின்சார விபத்து ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்

மின்சார விபத்து ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்

மின்சார விபத்து ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் (What to do in the event of an electrical accident)

பொதுவாக மின்சார விபத்து என்பது சர்வ சாதாரணமாகி விட்டது.

எனவே புயல் மழை காலங்களில் பொது இடங்கள் மற்றும் வீடுகளில் மின்சார விபத்து தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது.

மின்சார விபத்து ஏற்பட்டால் எப்படிக் கையாள்வது என்பது பற்றி பார்ப்போம்.

மரத்தால் ஆன பொருட்களை வைத்தே முதலுதவி செய்வது எப்படி

மின் தாக்குதலுக்கு உள்ளான நபரை காப்பாற்ற செல்பவர்கள் நேரடியாக தொட்டு விடக்கூடாது.

மரக் கட்டையை வைத்து மெயின் ஸ்விட்சை அனைத்துவிட வேண்டும். பின்னர் இணைப்பை முழுவதுமாக துண்டித்து விட வேண்டும்.

ஏனென்றால் மரக்கட்டை மின்சாரத்தைக் கடத்தாது.

தண்ணீர் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்

மின்சாரம் தாக்கிய நபரை சுற்றி தண்ணீர் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

தண்ணீர் இருந்தால் மின்சாரம் பாயும் வேகம் அதிகரிக்கும். அதிக உயரத்திலிருந்து மின் விபத்துக்கு உள்ளான நபர் கீழே விழும்போது கழுத்துப்பகுதியில் அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

எனவே பாதிக்கப்பட்ட நபரை உடனே கழுத்தை அசைக்காமல் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

சுய நினைவோடு உள்ளாரா என்பதை சோதிக்க வேண்டும்

மின்சார விபத்தில் சிக்கியவர் சுயநினைவோடு உள்ளாரா, சுவாசிக்க முடிகிறதா என்பதை பரிசோதிக்க வேண்டும்.

மின்சாரம் தாக்கிய பின் சுயநினைவு இழந்தவர்கள் சுவாசிக்கச் சிரமப்படுவார்கள். அதேபோல் தீக்காயம், மனதில் படபடப்பு, நெஞ்சு வலி ஏற்பட்டிருக்கும்.

மின்சார விபத்தில் சிக்கியவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

மின்சாரத்தால் தாக்கப்பட்ட குரங்கை உணவு கொடுக்கக்கூடாது

மின்சாரம் தாக்கப்பட்டு பொது இடங்களில் யாராவது கிடந்தால் அவர்களை உடனடியாக அவசர ஊர்தியை அழைத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

மின்சார விபத்தில் காயமடைந்தவர் சுவாசம் மற்றும் நாடி துடிப்பு சீராக இல்லாமல் இருந்தால் முதல் உதவி செய்யத் தெரிந்தவர்கள் நெஞ்சை அழுத்தி முதலுதவி செய்ய வேண்டும்.

மின் விபத்து ஏற்பட்டு மயக்கம் அடைந்தவருக்கு உட்கொள்ள உணவு கொடுக்க கூடாது. ஏனென்றால் உணவு சுவாசப் பைக்குள் சென்று உயிரிழப்பு ஏற்பட வழிவகுக்கும்.

இரும்பை பிடிக்கக் கூடாது

தீக்காயம் அடைந்த போது உடலில் துணிகளை சுற்றக் கூடாது. தீப்புண் பட்ட இடத்தில் ஐஸ் கட்டி ஒத்தடம் கொடுத்து விட்டு பின்னர் குளிர்ந்த தண்ணீரை தீக்காயம் பட்ட இடத்தில் மெதுவாக ஊற்றலாம்.

தீ காயம் அடைந்தவர் உடலில் உள்ள இதயம், மூளை, சதை பகுதி, கிட்னி ஆகிய பகுதிகளில் விரைவில் பாதிப்படையலாம்.

இதேபோல் முகத்தில் தண்ணீர் தெளிக்க கூடாது. அது மட்டும் இன்றி திடீரென வலிப்பு ஏற்பட்டால் அவரது கையில் இரும்பு போன்ற ஆயுதங்களை கொடுக்கக் கூடாது.

விரைவாக மருத்துவமனைக்கு தூக்கிச் செல்ல வேண்டும்

மின் விபத்தில் காயமடைந்தவர் கை கால்களை உதறும் போது எலும்புகள் உடையும் வாய்ப்புகள் உள்ளது.

மின் காயம் அடைந்தவர்களில் உடலை நீளமான பொருளுடன் சேர்த்து வைத்து கட்டி மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்ல வேண்டும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments