Monday, January 13, 2025
Homeஅரசியல்பணத்திற்கு யார் பொறுப்பு; ஏன் இன்னும் ராஜினாமா செய்யவில்லை: ராகுல் சரமாரி கேள்விகள்

பணத்திற்கு யார் பொறுப்பு; ஏன் இன்னும் ராஜினாமா செய்யவில்லை: ராகுல் சரமாரி கேள்விகள்

புதுடெல்லி: முதலீட்டாளர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இழந்தால் யார் பொறுப்பு? என காங்கிரஸ் எம்.பியும் எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

அதானி குழுமம் மோசடி செய்ய பயன்படுத்திய வெளிநாட்டு நிறுவனங்களில் செபியின் தலைவர் மாதாபி பூரி புச் மற்றும் அவரது கணவர் பங்குகளை வைத்திருப்பதாக ஹிண்டன்பர்க் குற்றம் சாட்டியிருந்த நிலையில், ‘இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை; இதற்கு செபி தலைவர் மறுப்பு தெரிவித்தார். அதானி குழுமமும் மறுத்துள்ளது.

பங்கு சந்தை இந்நிலையில், சமூக வலைதளங்களில் ராகுல் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: இந்தியா – ஆஸ்திரேலியா இடையே சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெறுவதாக வைத்துக் கொள்வோம். நடுவர் முடிவெடுப்பதில் தவறு செய்கிறார் என்பது போட்டியைப் பார்க்கும் மற்றும் விளையாடும் ஒவ்வொரு நபருக்கும் தெளிவாகத் தெரியும்.

எனவே, அந்த போட்டி பற்றி என்ன? போட்டியின் நேர்மை மற்றும் முடிவு என்னவாக இருக்கும்? இதுதான் இந்திய பங்குச்சந்தையில் நடக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், இந்தியப் பங்குச் சந்தைக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வருவது எனது கடமை.

ஏன் ராஜினாமா செய்யக்கூடாது? செபி தலைவர் மாதபி புச் ஏன் இன்னும் ராஜினாமா செய்யவில்லை? முதலீட்டாளர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இழந்தால் யார் பொறுப்பு? பிரதமர் மோடியா? செபி தலைவர்? அல்லது உச்சநீதிமன்றமே இந்த விவகாரத்தை விசாரிக்குமா?

பார்லி கூட்டு கமிஷன் விசாரணைக்கு பிரதமர் மோடி ஏன் பயப்படுகிறார் என்பது இப்போது எனக்கு புரிகிறது. சில்லறை முதலீட்டாளர்களின் செல்வத்தைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள செபியின் நேர்மை, அதன் தலைவர் மீதான குற்றச்சாட்டுகளால் கேள்விக்குறியாகியுள்ளது. ராகுல் கூறினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular