- மூன்று மாதங்களுக்கு ஒரு முறை என்று ரத்த தானம் செய்கிறவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வரும் வாய்ப்பு மூன்றுக்கு ஒரு பங்கு குறைகிறது.
- உடலில் புது ரத்தம் பாய்கிறது. அதாவது, ரத்த தானம் செய்த பின் புதிதாய் சிவப்பணுக்கள் உடலில் உற்பத்தி ஆகின்றன
- ரத்த சோதனைகள் : அனீமியா, ரத்த அழுத்தம், உடல் எடை, ஹெபாடிடிஸ் பி, ஹெபாடிடிஸ் சி, எய்ட்ஸ், பால்வினை வியாதிகள், மலேரியா- இவை உங்களுக்கு இருக்கின்றனவா என்று இலவசமாக சோதனை செய்யப்படும்.
- உங்கள் உடல் எடுத்த ரத்தம் அத்தனையையும் இரண்டு நாட்களிலேயே திரும்பச் சுரந்து விடும்.
- ரத்த தானம் செய்வதால் உடல் நலம் கெடாது.
- மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ரத்த தானம் செய்யலாம்.
- எந்த அபாயமும் இல்லை. ரத்த அழுத்தம் சோதனை செய்யப்படுகிறது.
- இதன் மூலம் உங்கள் உடல் நிலை குறித்து அறிய முடியும்.
- ஒரு யூனிட் ரத்த தானம் செய்யப்படும்போது 650 கலோரிகள் எரிக்கப்படுகின்றன.
- நாம் நல்ல உடல் நிலையில் ஆரோக்கியமாக இருக்கிறோம் என்ற மன தைரியம் பிறக்கின்றது.
- உங்கள் ரத்த தானமானது 3 உயிர்களை காப்பாற்றக்கூடும்.
ஏன் ரத்த தானம் செய்ய வேண்டும்?
RELATED ARTICLES