Thursday, March 28, 2024
Homeஆன்மிகம்முருகப்பெருமானுக்கு கந்தசஷ்டி கொண்டாடுவது ஏன்

முருகப்பெருமானுக்கு கந்தசஷ்டி கொண்டாடுவது ஏன்

கந்தனுக்கு கந்தசஷ்டிகந்தசஷ்டி கொண்டாடுவது ஏன்

கந்தசஷ்டி கொண்டாடுவது ஏன்? தேவர்களின் தந்தையான கஷ்யப முனிவருக்கும்,அசுரேந்திரன் என்பவனின் மகள் மாயைக்கும் சூழ்நிலை காரணமாக இரண்டாம் திருமணம்நடந்தது. அவர்களுக்கு சூரபத்மன், சிங்கமுகன், தாரகாசுரன் பல உள்ளிட்ட அசுரர்களும், அஜமுகி என்ற மகளும் பிறந்தனர். இதில் சூரபத்மன் தவமிருந்து, சிவனின் ஆற்றலைத் தவிர வேறு யாராலும் தன்னைக்கொல்ல முடியாது என்று வரம் பெற்றான். வரத்தின் பலத்தால், தேவர்களைத் துன்புறுத்த தொடங்கினான். தேவர்கள் தங்களைக் காப்பாற்றும்படி சிவனைச்சரணடைந்தனர். சிவன் தன் நெற்றிக் கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகளை உண்டாக்க, அவை சரவணப் பொய்கையில் விழுந்து குழந்தைகளாக மாறின. அந்தக் குழந்தைகளை கார்த்திகைப் பெண்கள் வளர்த்து ஆளாக்கினர். பார்வதிதேவி. அந்த ஆறு குழந்தைகளையும் சேர்த்து அணைத்து, ஆறுமுகமும், பன்னிருகைகளுமாக ஒரே உருவமாக மாற்றினாள். ‘கந்தன்’ என பெயர் பெற்ற அந்தக் குழந்தைக்கு, தன் சக்தியெல்லாம் ஒன்று திரட்டி செய்த வேலை பரிசாக அளித்தாள். சக்தி வேலுடன் புறப்பட்ட கந்தன், சூரபத்மனை சம்ஹாரம் செய்து தேவர்களைக் காப்பாற்றினார். இதன் அடிப்படையில், ஐப்பசி மாதம் அமாவாசைக்கு மறுநாளான வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி வரை ஆறுநாள் கந்தசஷ்டி விரதம் மேற்கொள்வர். ஆறாவது நாளான சஷ்டியன்று, முருகன் கோயில்களில் சூரசம்ஹாரம் நடத்தப்படும். தம்பதியாக சஷ்டி விரதம் மேற்கொண்டால் நல்லறிவும், அழகும் உள்ள குழந்தைகள் பிறப்பது

12 நாள் சஷ்டி விழா

முருகத்தலங்களில் கந்தசஷ்டி விழா ஆறு நாள் நடக்கும். சில தலங்களில் மட்டும் ஏழுநாள் நடக்கும். ஆனால் திருச்செந்துாரில் முதல் ஆறுநாள் வரை சஷ்டி விரதமும், அதன் முடிவில் சூரசம்ஹாரமும் நடக்கும், ஏழாம் நாளில் முருகன், தெய்வானை திருக்கல்யாணம், ஊஞ்சல் சேவை நடக்கும்.

தோஷம் போக்கும்

அதனை அடுத்து ஐந்து நாட்களுக்கு
தோஷம் போக்கும் ஞானகுரு அசுரர்களை வதம் செய்யும் முன் குருபகவான் முருகனுக்கு அசுரர்களை பற்றிய வரலாறை எடுத்துச்சொன்னார். எனவே திருச்செந்துார் ‘தலமாக’ கருதப்படுகிறது. பிரகாரத்தில் உள்ள மேதாதட்சிணாமூர்த்தி கூர்மம், அஷ்ட நாகங்கள் அஷ்டயானைகள், மேதா மலை,என நான்கு ஆசனங்கள் மீது அமர்ந்திருக்கிறார்.இவருக்கு பின்புறம் உள்ள கல்லால மரத்தில் நான்கு வேதங்களும் கிளி வடிவில் உள்ளன.திருச்செந்துார் முருகனை மறையும். ஏனெனில் வணங்கினால், திருச்செந்துாரில் குருதோஷம் ஞானகுருநாதராக முருகன் அருள்புரிகிறார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments