- நம் முன்னோர்கள் ஆன்மீகத்தையும் அறிவியலையும் தொடர்பில் வைத்தே நமக்கு சடங்குகள் ஆகவும் சம்பர்தயமாகவும் கூறியுள்ளனர்.
- எதை கூறினாலும், நிச்சயம் அதில் ஏதாவதொரு அர்த்தம் இருக்கும். அதில் ஒன்று தான், வீட்டில் விளக்கேற்றிய பின் வீட்டை பெருக்கக் கூடாது என்பதாகும்.
- ஏன் வீட்டில் விளக்கேற்றிய பின், இரவு நேரத்தில் வீட்டை பெருக்கக் கூடாது? நம் முன்னோர்கள் அவ்வாறு கூறியதற்கான காரணம் என்ன? தெரிந்து கொள்வோம் வாங்க..!!
வீட்டை பெருக்குதல்:
- வீட்டை பெருக்குதல் என்பது வீட்டில் உள்ள குப்பைகளை வீட்டைவிட்டு அகற்றும் முறையாகும்.
- அக்காலத்தில் மின்சாரம் என்பது இல்லை. அதனால் இரவு நேரங்களில் சிறு விளக்கையே பயன்படுத்தினர்.
- அத்தகைய சமயங்களில் விலை உயர்ந்த பொருட்கள் ஏதேனும் அறியாமல் கீழே விழுந்து, அதை சரியான வெளிச்சம் இல்லாமல், கூட்டி பெருக்கி, குப்பையோடு ஒன்றாக கொட்டிவிடுவோம்.
- இதனால் விலை உயர்ந்த பொருட்களை நாம் இழக்க நேரிடும். இதுவே நாம் பகல் வேளையில் கூட்டி பெருக்கும்போது, அந்த பொருள் நம் கண்களுக்கு தென்படும்.
- இவற்றையெல்லாம் தவிர்ப்பதற்காகவே, வீட்டில் விளக்கேற்றிய பின் வீட்டை பெருக்கக் கூடாது.
- மகாலட்சுமி வீட்டை விட்டு போய்விடும் என்று கூறி வைத்தனர்.
- அதாவது, மகாலட்சுமி என்றாலே செல்வம். செல்வம் வீட்டை விட்டு வெளியேறிவிடும் என்பதையே இவ்வாறு கூறினர்.
- இரவு நேரத்தில் தலை வாரக் கூடாது
- இரவு நேரத்தில் வீட்டை பெருக்கக் கூடாது என்பது போலவே, இரவு நேரத்தில் தலை வாரக் கூடாது என்றும் கூறுவார்கள்.
- ஏனென்றால், மாலை நேரம் என்பது மகாலட்சுமியை வரவேற்கும் நேரம் என்று கூறுவார்கள்.
- இந்த நேரத்தில் முடியை வாரினால் மகாலட்சுமி வீட்டிற்குள் வரமாட்டாள் என்பார்கள்.
- ஆனால் உண்மையில் அந்த காலத்தில் வாழ்ந்த மக்கள், இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாமல் இருந்தார்கள்.
- இதனால் இரவு நேரங்களில் தலை வாரினால், அது உணவுகளிலோ, மற்ற இடங்களிலோ விழும் வாய்ப்பு அதிகமாக இருக்கும்.
- அவ்வாறு அது உணவுகளில் கலந்தால், உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும்.
- இதன் காரணமாகவே, இரவு நேரங்களில் தலை வாரக் கூடாது என்று கூறினார்கள்.