- உலகில் உள்ள அனைத்து ஜீவ ராசிகளின் ஆத்மாக்களும் நீரிலிருந்தே உண்டாகின்றன. மீண்டும் தண்ணீரிலேயே ஐக்கியமாகி விடுவதாக வேதங்கள் கூறுகின்றது.
- அதனால் ஜீவராசிகளுக்கு ஆதிகாரணமாக இருக்கும் மூலகர்த்தாவாகிய எல்லாம் வல்ல இறைவனை நீரின் உருவ வழிபாட்டுக்கு கொண்டு வருவதே பூரண கும்பத்தின் தத்துவம்.
கலசத்தை ஏன் வழிபடுகிறோம்?
- கலசம் என்பது கும்பம் என்று அழைக்கப்படுகிறது. கங்கையின் புனித நீர் போன்று இந்தக் கலசத்தில் இருக்கும் நீருக்கும் புனிதம் அதிகம். இந்துக்கள் தங்கள் வீட்டின் சுப நிகழ்ச்சிகளிலும், விசேஷ விரத நாட்களிலும் பூஜையறையில் கும்பம் வைத்து வழிபடுவார்கள்.
- செம்பு, பித்தளை, தாமிரம், வெள்ளி போன்ற உலோகத்தினால் செய்யப்பட்ட நீர் நிறைந்த செம்பு கலசம் அல்லது கும்பம் என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கலசத்தில் நீர் அல்லது அரிசி நிரப்பப்படும் இந்தக் கலசம் விசேஷ காலங்களில் முக்கியத்துவம் கொடுத்து பூஜிக்கப்படுகிறது.
கலசம் வைத்து வழிபடுவது ஏன்
- நம் மரபில் நல்ல நிகழ்வுகள் நடக்கும் போதும், பூஜை போன்ற புனிதமான காரியங்களின் போதும் கலசம் வைப்பது மரபு.
- திருமண சடங்குகளில் கலச கும்பமே முதலில் செல்லும் மணமகனும், மணமகளும் பின் செல்வார்கள். வீடு கிரஹபிரவேசம் என எல்லா சடங்களிலும் முதன்மையாக இருப்பது கலச கும்பம் தான்.
- பூஜைகள் செய்யும் போது யாகங்கள், ஹோமங்கள் நடத்தும் போது அங்கே முதன்மையாக இருப்பது கலசம்.
- ஆன்மீக பெரியோர் அல்லது முக்கியமானவர்களுக்கு பூரண கும்ப மரியாதை கொடுத்து வரவேற்பதை நாம் பார்த்திருப்போம்.
- எனில் இந்த பூரண கும்பம் அல்லது கலசம் என்பது என்ன? கலசம் என்பது பித்தளை அல்லது செம்பால் ஆன சிறு பானை போன்றது.
- அந்த கலசம் அரிசி அல்லது நீரால் நிறைந்திருக்கும். கலசத்தை சுற்றி மாவிலை மற்றும் மலர்கள் அலங்கரிக்கப்பட்டு கலசத்தின் மீது தேங்காய் வைக்கப்பட்டிருக்கும்.
- கலச ஜோடனை என்பது நிகழ்வுக்கு தகுந்தார் போல மாறும். ஆனால் அதில் அடிப்படையாக அரிசி, நீர், மாவிலை, நாணயங்கள் ஆகியவை இடம்பெற்றிருக்கும்.
- அடிப்படையில் இது அபரிமீதத்தை குறிக்கிறது. நிறைவான ஒரு மங்கள பொருள்.
- ஒருவரின் வாழ்வும் அனைத்து நல்லவையும் நிறைந்து பரிபூரணமாக இருக்க வேண்டும் என்பதன் அடையாளமே இந்த பூரண கும்பம். இதற்கு சோம கலசம், சந்திர கலசம், இந்திர கும்பம், பூரண கும்பம் என்பது போன்ற பல பெயர்கள் உண்டு.
- இந்த கலச அமைப்பு குறித்து சொல்லப்படும் கருத்து யாதெனில் கலசம் என்பது பஞ்ச பூதங்களின் அடிப்படியிலானது அதாவது உலோகத்தால் அல்லது மண்ணாலான பானை அல்லது செம்பு மண் அதாவது பூமியை குறிக்கிறது.
- அதனுள் நிரப்பப்படும் தண்ணீர் நீரை குறிக்கும், அதனுடைய கழுத்து பகுதி அக்னியையும், அதனுடைய வாய் பகுதி வாயுவையும் தேங்காயின் உச்சி பகுதி ஆகாயத்தை குறிக்கிறது என்பது ஒரு சாரரின் கருத்துருவாக்கம்.
- அடிப்படையில் கலசத்திற்கு புனித நீரை இட்டு நிரப்புவது வழக்கம். இது வேதங்களின் அறிவை கொண்டுள்ளது என்று பொருள். கலசத்தை பூஜையில் இருத்தி பிரதிஷ்டை செய்கிற போது நாம் விரும்பி அழைக்கும் தேவர்கள், தெய்வங்கள் அந்த கலசத்தில் வந்து அமர்வதாக பொருள்.
- அதனால் தான் பூஜை, யாகம் அல்லது ஹோமத்தின் முடிவில் கலசத்தில் இருக்கும் நீரை எடுத்து வீடுகள் தோறும் தெளிக்கிறோம். தெய்வங்கள் நிறைந்த அந்த நீரை வீடுகள் தோறும் தெளிக்கிறோம் என்று பொருள்.