பினாயிலை குடித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிழப்பு
ராமநாதபுரம் மாவட்டம் மலையான் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவரின் தந்தை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்துள்ளார். பின்பு ராஜ்குமாரின் அம்மா கருப்பாயி ராஜ்குமார் வீட்டில் வசித்து வருகிறார். 5 ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த கருப்பாயி சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனால் மனவேதனையில் இருந்தவர் மலையான் குடியிருப்பு பகுதியில் உள்ள தனது மகன் வீட்டில் இருந்த பினாயிலை குடித்துள்ளார்.
பின்னர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சையில் இருந்த கருப்பாயி சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். கருப்பாயி மகன் ராஜ்குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் எமனேஸ்வரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.