Tuesday, June 6, 2023
Homeராமநாதபுரம்மகளிர் சுய உதவிக் குழு சேவை மையம் கட்டிடம் திறப்பு விழா

மகளிர் சுய உதவிக் குழு சேவை மையம் கட்டிடம் திறப்பு விழா

மகளிர் சுய உதவிக் குழு சேவை மையம் கட்டிடம் திறப்பு விழா

இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம், பெரியகீரமங்கலம் ஊராட்சி, சின்னக்கீரமங்கலம் கிராமத்தில் நேற்று (13.10.2022) வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் மகளிர் சுய உதவிக் குழு சேவை மையம் கட்டிடம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜானி டாம் வர்கீஸ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையேற்று மகளிர் சுய உதவிக்குழு சேவை மைய கட்டிடத்தை திறந்து வைத்து தெரிவிக்கையில்,மகளிர்கள் பொருளாதார முன்னேற்றங்கள் பெற்றிட அரசு பல்வேறு திட்டங்களை வழங்கி வருகின்றன. மேலும் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு ஊராட்சியிலும் வறுமையிலும், வறுமையில் உள்ள இலக்கு மக்களை கண்டறிந்து அவர்களின் மூலம் மகளிர் குழுக்கள் அமைத்து அந்த குழுக்கள் பொருளாதார முன்னேற்றம் பெற்றிட ஏதுவாக தொழில் பயிற்சியுடன் கூடிய வங்கிக் கடனுதவிகளை பெற்று தருகின்றன. அந்த வகையில் திருவாடனை ஊராட்சி ஒன்றியத்தில் 48 மகளிர் சுய உதவி குழுக்கள் இருந்து வருகின்றனர். சின்னகீரமங்கலம் பகுதியில் உள்ள மகளிர் குழுவினர் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில் சேவை மைய கட்டிடம் புதிதாக கட்டப்பட்டு இங்கு தொழில் பயிற்சி மற்றும் உற்பத்தி பொருள்கள் விற்பனை செய்யும் மையமாக அமைத்து செயல்படுவது மற்ற மகளிர் குழுக்களுக்கு முன்னுதாரணமான குழுவாக இருப்பது பாராட்டுத்தக்கதாகும்.

இந்த சேவை மையம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ளதால் சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் பகுதியாகும். இங்கு மகளிர் குழுக்களால் உற்பத்தி செய்யப்பட்டுள்ள உணவு வகை பொருள்கள், கைத்தறி ஆடைகள், பனை ஓலையால் செய்யப்பட்ட அழகு சாதன பொருட்கள், மற்றும் கடல் சங்கு மற்றும் பாசிகளால் செய்யப்பட்ட அழகு சாதன பொருட்கள், மக்களை கவரும் நிலையில் உள்ளதால் அதிக அளவு விற்பனையாகும் அளவிற்கு இந்த வளாகம் அமைந்துள்ளது. இதை நல்ல முறையில் பயன்படுத்தி மகளிர் குழுக்கள் மக்களின் சேவை அறிந்து பொருள்களை உற்பத்தி செய்து விற்பனை மேற்கொண்டு பயன்பெற்றிடவேண்டும். இதன் மூலம் ஒவ்வொரு குழுவில் உள்ள தனிநபரின் முன்னேற்றத்திற்கு சேவை மையம் மிகப் பயனுள்ளதாக இருக்கும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜானி டாம் வர்கீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

தொடர்ந்து மகளிர் சுய உதவிக்குழு சேவை மையம் மூலம் பயிற்சி பெற்ற 10 நபர்களுக்கு பயிற்சி சான்றிதழையும், 1 மகளிர் குழுவிற்கு ரூ.5 இலட்சத்திற்கான சுழல் நிதி கடனுதவியினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜானி டாம் வர்கீஸ், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட அலுவலர் திரு.சி.எஸ்.பிரதீப் அவர்கள், திருவாடனை வட்டாட்சியர் திரு.செந்தில்வேல்முருகன் அவர்கள், பெரிய கீரமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி.சரளாதேவி அவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments