ஆன்மீகம் என்பது பெண்கள் ஆண்கள் இருவருக்கும் பொதுவான விஷயம் தான். ஆனால் ஒரு வீட்டின் மகாலஷ்மி என்று அழைக்கப்படுபவர் பெண்.
ஆண்களை விட பெண்களுக்கே அந்த வீட்டின் முன்னேற்றத்தில் அதிக பங்கு இருக்கிறது.
இவ்வாறு ஒரு குடும்பத்தின் ஆணிவேரான பெண்களுக்ககென்று இருக்கின்ற கடமைகள் பலவாகும். எனவே இவர்கள் செய்யும் ஒவ்வொரு சிறு சிறுவிஷயங்களளின் பாதிப்பும் அவர்களின் குடும்பத்திலே பிரதிபலிப்பை உண்டாக்கும். அவை நல்லதாக இருந்தாலும், கெட்டதாக இருந்தாலும் சரி.
அவ்வாறு ஒரு சில பெண்கள் தனக்கும் தெரியாமல் செய்யும் சிறு தவறுகளால் அவர்களின் குடும்பத்திற்கு வரும் பாதிப்புகளைப் பற்றி தான் இந்த பதிவில் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
திருமணமான பெண்கள் காலில் மெட்டி அணிந்து கொள்வது என்பது நமது வழக்கமாகும். ஆனால் ஃபேஷன் என்ற பெயரில் ஒரு காலில் ஒரு விரலையும் தாண்டி இரண்டு மூன்று விரல்களில் மெட்டி அணிந்து கொள்கிறார்கள்.
அவ்வாறு செய்வது குடும்பத்திற்கு கஷ்டத்தை உண்டு செய்யும். தேவையில்லாத பிரச்சினைகளை கொண்டு வரும்.
காலை எழுந்தவுடன் பெண்கள் முதலில் செய்யும் ஒரு காரியம் வாசல் பெருக்கி தண்ணீர் தெளித்து கோலம் இடுவது. இவ்வாறு கோலமிடும் பொழுது தெற்கு திசை நோக்கி நின்றுகொண்டு கோலமிட கூடாது. அது போல அமர்ந்து கொண்டும், முட்டிபோட்டுக் கொண்டும் கோலமிடுதல் என்பது அதிர்ஷ்டத்தை நம்மிடமிருந்து குறைக்கும் செயலாகும்.
திருமணமான பெண்கள் நெற்றி வகுடில் குங்குமம் பொட்டு வைக்கும் போது கிழக்கு திசை நோக்கி பார்த்தவாறு குங்கும பொட்டை வைக்க வேண்டும். திருமணமாகாத பெண்களும் கிழக்கு திசை நோக்கி பார்த்து நெற்றியில் இரு புருவங்களுக்கும் இடையில் குங்குமம் வைத்துக் கொள்ளலாம்.
அமாவாசை தினத்தன்று வாசலில் கோலம் இடக்கூடாது. அமாவாசை விரதம் முடிந்து, பூஜை செய்து முடித்த பின்னர் மாலை வேளையில் வாசல் தெளித்து கோலம் போட்டு மகாலஷ்மியை வரவேற்கலாம். அடுத்ததாக வெள்ளிக் கிழமை நாட்களில் கசப்பு சுவை மிக்க பாகற்காயை உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடாது. இவ்வாறு செய்வதால் பாவம் வந்து சேரும் என்று கூறப்படுகிறது.
கோவிலுக்கு சென்று இறைவனை வணங்கி விட்டு அங்கு அமர்ந்து தேவையில்லாத கதைகள் பேசக்கூடாது. அதுமட்டுமல்லாமல் நமது பிரச்சனைகளை நினைத்துக் கொண்டும் இருக்க கூடாது. கடவுளின் திருநாமத்தையோ அல்லது ஏதாவது ஒரு மந்திரத்தையோ உச்சரித்துக் கொண்டு இருக்க வேண்டும்.
கோவிலுக்கு சென்று இறைவனை வணங்கும் பொழுது பெண்கள் கால்களை மடக்கி மண்டியிட்டு தலையின் நெற்றிப் பகுதி தரையில் படுமாறு வணங்கவேண்டும். அவ்வாறு பெருமாள் கோவிலில் பிரசாதமாக கொடுக்கும் துளசியை தலையில் வைத்து அழகு பார்க்க கூடாது. அவற்றை பிரசாதமாக உட்கொள்ள வேண்டும்.
அதுபோல பலரும் தெய்வத்தின் விக்ரகத்தை கைகளால் தொட்டு வணங்குவார்கள். அவ்வாறு செய்வது நமக்கு தோஷத்தை மட்டுமே கொடுக்கும். பூஜை செய்யும் பூசாரியை தவிர மற்றவர்கள் விக்கிரகத்தை தொட்டு வணங்குதல் என்பது கூடாது. இவ்வாறு நமக்கும் தெரியாமல் செய்யும் சிறு சிறு தவறுகளை சரி செய்து வாழ்வில் முன்னேற வேண்டும் என்று கூறி இப்பதிவை இத்துடன் முடித்துக் கொள்கிறோம்.
செய்யக்கூடாத தவறுகள் :
முதலில் உங்களுக்கு ஒரு கஷ்டம் வருகிறது என்றால் உங்களை விட்டு ஒரு கர்மா குறைந்தது என்று நினைத்துக் கொள்ளுங்கள். அதை விடுத்து யாரால் கஷ்டம் வந்தது.
இந்த கஷ்டம் வர காரணமாக இருந்த அந்த குறிப்பிட்ட நபரை திட்டி அவருக்கு சாபம் கொடுத்து, அவரை பழிவாங்க சென்று புதியதாக ஒரு கர்மாவை நீங்கள் தேடிக் கொள்ளாதீர்கள். பிரச்சினையைத் தீர்ப்பதற்கு வழியைத்தான் காண வேண்டுமே தவிர பிரச்சனை எதனால் வந்தது யாரால் வந்தது என்று அலசி ஆராய்ந்து குழப்பிக் கொண்டு இருக்கக் கூடாது. இது முதல் விஷயம்.
இரண்டாவதாக வீட்டில் ஏதாவது பிரச்சினை வந்து விட்டால் வீட்டில் இருக்கும் பெண்கள் தலையில் அடித்துக்கொண்டு, வயிற்றில் அடித்துக்கொண்டு, ஐயோ! என்று சொல்லி அழுது புலம்பும் பழக்கத்தை விட்டுவிடுங்கள்.
ஒரு வீட்டில் அப்படி செய்யவே கூடாது. நடந்த தவறை மீண்டும் மீண்டும் புலம்பி அழும் போது, அந்த கஷ்டத்தை திரும்பத் திரும்ப நம்முடைய உறவினர்களிடம் சொல்லி பகிரும் போது, அந்த கஷ்டம் நமக்கு இரட்டிப்பு சுமையை கொடுத்துவிடும். கஷ்டம் வந்திருச்சா அதை அப்படியே விட்டு விட்ருங்க. தானா வந்த கஷ்டம் தானா சரியாயிடும்.
இதே போல தான் நிறைய பேர் வீடுகளில் ஏதாவது பெரிய பிரச்சினை வந்துவிட்டால், இறந்த முன்னோர்களை திட்டுவார்கள். இறந்த முன்னோர்களை திட்டவோ, அவர்களை பழிக்கவோ கூடாது. இறந்த முன்னோர்கள் நம்முடைய கடவுள்.
அவர்களை நினைத்து இந்த பிரச்சனை தீர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்வது நல்லது.
பிரச்சனை வந்துவிட்டதா அதை முதலில் இறைவனின் பாதங்களில் இறக்கி வைத்து விடுங்கள். இந்த பிரச்சனையிலிருந்து எப்படியாவது என்னை வெளியே கொண்டு வருவதற்கு தைரியத்தை கொடுக்க வேண்டுமென்று வேண்டிக் கொள்ளுங்கள்.
அதன் பின்பு உங்கள் வீட்டினருகில் எந்த கோவில் இருந்தாலும் அந்த கோவிலுக்கு சென்று உங்களுடைய மனதை சாந்தப் படுத்தி கொள்ளுங்கள்.
குறிப்பாக வீட்டின் அருகில் ஏதாவது சித்தர்கள் சமாதி அடைந்த கோவில்கள் உள்ளதா என்று பாருங்கள். அந்த இடத்திற்குப் போய் அமர்ந்து உங்களுடைய கஷ்டங்கள் தீர வேண்டும் என்று மனதார தியானம் செய்ய வேண்டும். இதன் மூலம் உங்களுடைய குழப்பங்களுக்கு கூடிய சீக்கிரத்தில் ஒரு தெளிவு பிறக்கும்.
மேல் சொன்ன விஷயங்களை முயற்சி செய்து பார்த்தால் உங்களுக்கே புரியும். நம்பிக்கையோடு செய்யக்கூடிய வழிபாடு நமக்கு சீக்கிரம் நல்ல பலனைக் கொடுக்கும் என்ற கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.
இதையும் படியுங்கள் : அனைவரும் கண்டிப்பாக தெறிந்து வைத்திருக்க வேண்டிய மருத்துவ குறிப்புகள்