இராமநாதபுரம் மாவட்டம் கமுதி, கமுதியில் மகளிர் உரிமைத் தொகைக்கு முதியோர், மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிப்பதற்காக 3 நாள்கள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து கமுதி வட்டாட்சியர் கூறியதாவது:
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டத்தில் மொத்தமுள்ள 36,546 குடும்ப அட்டைதாரர்களில், முதல் கட்டமாக கடந்த ஜூலை 24 முதல் கடந்த ஆக. 4-ஆம் தேதி வரை மகளிர் உரிமைத் தொகைக்காக 25,027 விண் ணப்பங்கள் பெறப்பட்டன. இரண் டாம் கட்டமாக கடந்த 5 முதல் 11- ஆம் தேதி வரை 11,519 விண்ணப்பங் கள் பெறப்பட்டன. இந்த நிலையில், மகளிர் உரிமைத் தொகை பெற முதியோர், விதவை, மாற்றுத்திறனாளிகள், கணவனால் கைவிடப்பட்டோர் உதவித் தொகை பெறும் குடும்பத்தலைவிகளும் தகுதியானவர்கள் என அரசு அறிவித்தது.
நடைபெற்ற சிறப்பு முகாம்
இதனால் அந்தந்தப் பகுதிகளில் உள்ள வருவாய் ஆய்வாளர் குடியிருப்பு, நியாய விலைக் கடைகளில் சிறப்பு முகாம்கள் நடை பெறவுள்ளது. உதவித் தொகை பெறுவோர் வருகிற 18 முதல் 20-ஆம் தேதி வரை நடை பெறும் இந்த முகாம்களில் கலந்து கொண்டு விண்ணப்பங்களை வழங்கிப் பயனடையலாம் என்றார்.அப்போது, துணை வட்டாட்சியர் மேகலா, முதுநிலை உதவியாளர் சிவகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.