முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம் வெங்கலகுறிச்சி ஊராட்சியில் கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை மற்றும் பாலர் சபை அமைத்தல் தொடர்பான சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.டி செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பானுமதிமுருகவேல் முன்னிலை வகித்தனர்.
ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் சாந்தி, சாத்தையா, கிறிஸ்டினா, ஆலன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன், சமூக ஆர்வலர் அரசு பாண்டி, கீழத்துவல் ஆரம்ப சுகாதார நிலைய அலுவலர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.