உலக வன்முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு!உதவி ஆட்சியர் தலைமையில்பேரணி
இராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் வளாகத்தில் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் பெண்களுக்கு எதிரான உலக வன்முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி துவக்க நிகழ்ச்சி உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயண சர்மா, தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்து பேரணியில் பங்கேற்றார்.ராமநாதபுரத்தில் வலம் வரும் விழிப்புணர்வு பேரணி
இப்பேரணியில் சுமார் 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு குறித்த வாசகங்கள் கொண்ட பதாதைகள் ஏந்தி பெண்களின் பாதுகாப்பு மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஒழிப்பு குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் நகரின் முக்கிய வீதிகள் வழியாக விழிப்புணர்வு பேரணி சென்று நிறைவாக இராமநாதபுரம் அரண்மனை பகுதியை வந்தடைந்தது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் சாந்தி, மங்கையகரசி, மோகன பிரியா, மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.