Tuesday, October 3, 2023
Homeராமநாதபுரம்"உலக மக்கள் தொகை தினம்”மக்கள் தொகையை கட்டுப்படுத்த விழிப்புணர்வு

“உலக மக்கள் தொகை தினம்”மக்கள் தொகையை கட்டுப்படுத்த விழிப்புணர்வு

1987 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11ஆம் தேதி உலக மக்கள் தொகை 500 கோடியை தாண்டியதை முன்னிட்டு, நாம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11 ஆம் நாளை மக்கள் தொகை பெருக்கத்தின் விளைவுகளைப் பற்றியும் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதில் அவசியத்தை பற்றியும் நாட்டு மக்களிடையே எடுத்துக் கூறி விழிப்புணர்வை ஏற்படுவதற்காக “உலக மக்கள் தொகை தினமாக” அனுசரித்து வருகிறோம்.

நமது மாநிலம் குடும்ப நலத்திட்டத்தை செயல்படுத்துவதிலும் மக்கள் தொகை கட்டுப்படுத்துவதிலும் அகில இந்திய அளவில் கேரளாவிற்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் உள்ளது. இதே நிலையை தொடர்ந்து கடைபிடித்து மக்கள் தொகையை கட்டுப்படுத்தி இரண்டு குழந்தைகளுக்கு மேல் இல்லை என்ற இலக்கினை அடைய 11.07.2023 அன்று அனுசரிக்கப்படும். உலக மக்கள் தொகை தினத்தன்று உறுதிமொழி ஏற்றுள்ளோம்.

“சுதந்திர அமுத பெருவிழாவினை கொண்டாடி மகிழ்வோம் குடும்பநல உறுதிமொழியினை ஏற்று வளம் பெறுவோம்”

உலக மக்கள் தொகை 733.6, இதில் இந்தியாவின் மக்கள் தொகை 121 கோடி, தமிழ்நாட்டில் மக்கள் தொகை 7.21 கோடி, இராமநாதபுரம் மாவட்டத்தின் மக்கள் தொகை 13,53,445 ஆகும். இராமநாதபுரம் மாவட்டத்தில் 2021-ன் படி, பிறப்பு விகிதம் 12.7, இறப்பு விகிதம் 7.1, சிசு மரண விகிதம் 35, மகப்பேறு தாய்மார்களின் இறப்பு விகிதம் 45, CPR 75, தமிழ்நாட்டில் கல்வி அறிவு விபரம் ஆண்கள் 86.8 % மற்றும் பெண்கள் 73.9%மாகவும், இராமநாதபுரத்தில் மாவட்டத்தில் கல்வி அறிவு ஆண்கள் 87.8%, பெண்கள் 73.5 %மாக இருக்கின்றது.

மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த நாம் மேற்கொள்ள வேண்டியவைகள்,

ஆண்கள் 25 வயதிற்கு பிறகும், பெண்கள் 21 வயதிற்கு பிறகும் திருமணம் செய்து கொண்டு அல்லது இரண்டு குழந்தைகள் என்று அளவில் குடும்பத்தின் அளவை கட்டுப்படுத்துவதன் மூலம் வீட்டிலும், நாட்டிலும் மகிழ்ச்சி நிலவ வாய்ப்பு ஏற்படுகிறது. வாழ்க்கை தரம் உயர இதுவே வழிவகுக்கும். பெண் கல்வியை போற்றி வளமான தாயால் தான் வளமான சேயைப் பெற்றெடுக்க முடியும் என்பதை நினைவில் நிறுத்தி தாய் சேய் நலம் பேணி குழந்தைகள் நல்வாழ்வு வாழவும், சிறந்த கல்வியையும், வேலைவாய்ப்பையும், வாழ்க்கை வசதிகளையும் பெற சிறு குடும்ப நெறி ஏற்பது ஒன்றுதான் சிறந்த வழியாகும். பிறப்பு விகிதத்தை குறைக்க மக்கள் தொகையின் தாக்கம் பற்றி அனைத்து தரப்பும் மக்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

மருத்துவமனைகளிலும் இலவசமாக கருச்சிதைவு செய்வதை உறுதிப்படுத்த வேண்டும்.

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணி நேரமும் பிரசவம் பார்க்கப்படுகிறது. பிரசவத்திற்காக வரும் தாய்மார்களுக்கும் மற்றும் குடும்பநல அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் தாய்மார்களுக்கும் 3 நாட்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படுகிறது.

21.07.2023 வரை குடும்ப நல விழாவாக மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் அனைத்து அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களிலும் குடும்ப நல ஆலோசனைகள் வழங்கப்படுகிறது பொதுமக்கள் பயன்பெற வேண்டுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன்,  தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments