இராமநாதபுரம் மாவட்டம் உலக மக்கள் தொகை தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்கம் நிகழ்ச்சியை துவக்கி வைத்து மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த ஒவ்வொருவரும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன், தகவல்
இராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உலக மக்கள் தொகை தினத்தையொட்டி மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்ப நலத்துறையின் மூலம் உலக மக்கள் தொகை தின உறுதிமொழி மற்றும் விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன், தலைமையேற்று விழிப்புணர்வு உறுதிமொழி மேற்கொண்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையிலான விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தர் .
ஒவ்வொரு ஆண்டும் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்றைய தினத்தை உலக மக்கள் தொகை தினமாக கொண்டாடப்படுகிறது. இதன் நோக்கம் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்பதே ஆகும். உலகளவில் இந்தியாவில் மக்கள் தொகை அதிகம் என்ற நிலையில் அதை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுவாக மக்கள் தொகையும், பொருளாதார வளர்ச்சியும் இணையாக இருந்தால்தான் அங்கு மக்களுக்கான அனைத்து வசதிகளுடன் வாழ்ந்திட முடியும். அந்த வகையில் நமது நாட்டை பொறுத்தவரை பொருளாதார வளர்ச்சி நடுநிலையில் தான் இருந்து வருகின்றன. அதற்கேற்ப மக்கள் தொகை இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டுடன் அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொருவரும் படித்தவர்கள் தான். இந்நிலையில் மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் வகையில் தங்களின் பங்களிப்பாக மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி ஒரு குழந்தை அல்லது இரண்டு குழந்தை என்று நிலைக்கு மிகாமல் இருப்பது என்ற நிலை உருவாகி உள்ளது. நமது மாநிலத்தை போல் கேரளா மாநிலத்திலும் ஓரளவிற்கு கடைபிடிக்கும் நிலை இருந்து வருகிறது. காரணம் குறைவான குழந்தை என்றால் அவர்களுக்கான கல்வி மற்றும் வேலைவாய்ப்பை சரியாக பெற்றிட முடியும். குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம் என்ற நிலையில் அந்த குடும்பத்தின் பொருளாதார மட்டுமின்றி கல்வி, வேலைவாய்ப்பு உரிய காலங்களில் பெறுவதற்கான சிரமங்கள் ஏற்படுகின்றன. எவ்வாறு ஒரு வீட்டில் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகம் என்றால் ஏற்படும் பொருளாதார நெருக்கடியைபோல் நாட்டின் நிலைமையும் இதுதான். எனவே பொருளாதார வளர்ச்சிக்கேற்ப மக்களின் எண்ணிக்கையும் இருந்திடும் வகையில் அளவான குழந்தையோடு வளமான வாழ்வை பெற்று வாழ்ந்திடும் வகையில் ஒவ்வொருவரும் விழிப்புணர்வுடன் இருப்பது மட்டுமின்றி பிறருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி ஆரோக்கியமாக வாழ்ந்திட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன் தெரிவித்தார்
தொடர்ந்து மக்கள் தொகை கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன், கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். இந்த வாகனத்துடன் சுமார் 300க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக மக்கள் தொகை அதிகரிப்பால் ஏற்படும் தீமைகள் குறித்து வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி பொதுமக்கள் பார்த்து பயன்பெறும் வகையில் பேரணி சென்று நிறைவாக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை வந்தடைந்தது.
முன்னதாக உலக மக்கள் தொகை தினத்தையொட்டி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்பட்ட பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்று மற்றும் நினைவு பரிசினை மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன், வழங்கி பாராட்டினார்.இந்நிகழ்ச்சியில் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் செந்தில்குமார், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்ப நலம் துணை இயக்குநர் சிவானந்தவல்லி , அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் மலர்வண்ணன் , அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிலைய மருத்துவ அலுவலர் மனோஜ்குமார், செவிலியர் பயிற்சி பள்ளி முதல்வர் பார்த்திபன், மாவட்ட விரிவாக்க கல்வியாளர் முனைவர் திலீப்குமார் , அலுவலக கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜா மற்றும் மருத்துவர்கள் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.