பரமக்குடியில் உலக சவாரி தின மாணவர்கள் மிதிவண்டி விழிப்புணர்வு பேரணி
நவம்பர் 22ஆம் தேதி உலக சவாரி தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை அடுத்து ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி கவினா இன்டர்நேஷனல் பள்ளி சார்பில் மிதிவண்டி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் 53 மாணவர்கள் ஓட்டப்பாலம் முதல் பாம்பூர் வரை மிதிவண்டி விழிப்புணர்வு பேரணியாக சென்றனர்.
சைக்கிள் பேரணி
மிதிவண்டியை ஒதுக்கி தள்ளிய காரணத்தினால் ஆயுள் காலம் குறைந்துள்ளது, இன்சூரன்ஸ், பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது உள்ளிட்ட பதாகைகளுடன் பள்ளி மாணவர்கள் சைக்கிள் பேரணி சென்றனர். ஓட்டபாலம் தொடங்கி ஐந்து முனை, பேருந்து நிலையம் என நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்று பாம்பூரில் பேரணி நிறைவு பெற்றது.
இந்நிகழ்வில், பரமக்குடி நகர் மன்ற தலைவர் சேது.கருணாநிதி, பள்ளி தாளாளர் ஹேமலதா கண்ணதாசன், முதல்வர் சுமி சுதிர், தமிழ் ஆசிரியை சுந்தரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.