ஆத்தாடி… 85 கிலோவில் உலகக் கோப்பை மாடல் கேக்! – அசத்திய ராமநாதபுரம் பேக்கரி உரிமையாளர்
ராமநாதபுரத்தில் ஐஸ்வர்யா பேக்கரி நிறுவனத்தில் பார்வைக்கு வைக்கப்பட்ட 85 கிலோ உலகக்கோப்பை கேக்.
உலககோப்பை கால்பந்து போட்டியை முன்னிட்டு ராமநாதபுரம் பேக்கரியில் 85 கிலோ உலக கோப்பை கேக் வடிவமைத்து பார்வைக்காக வைக்கபட்டது
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
கால்பந்து விளையாட்டு பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பேக்கரி கேக் தயாரிக்கும் கலைஞர்கள் கார்த்திக், மணிமாறன், லியோ, அந்தோணி ஆகியோர் 260 முட்டைகள், 60 கிலோ சர்க்கரை ஆகியவற்றைப் பயன்படுத்தி 40 மணி நேரத்தில் இந்த கேக்கை தயாரித்தனர். இந்த கேக் கண்ணாடி பெட்டியில் பார்வைக்கு வைக்கப்பட்டது. இதை வாடிக்கையாளர்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்து வந்தனர்
ஆண்டு தோறும் இது போன்று விளையாட்டு போட்டிகள் நடைபெறும் போது அந்தந்த விளையாட்டுகள் குறித்து விழிப்புணர்வு கேக் தயாரித்து வைக்கப்படுவதாக நிறுவன இயக்குநர் வெங்கட்சுப்பு, மேலாளர் சதீஸ் ஆகியோர் தெரிவித்தனர்.