இந்தியாவில் மீண்டும் ஊரடங்கு?
இந்தியாவில் புதிய வகை ‛எக்ஸ்.இ’ கொரோனா தொற்று உறுதி. மும்பையில் ஒருவருக்கு பாதிப்பு.
மீண்டும் ஊரடங்கு
கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகம் முழுவதும் பல உருமாற்றங்களுடன் ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ்கள், இப்போது தான் படிப்படியாக குறையத் துவங்கியது. ஆனால், சீனாவில் தற்போது மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், அங்கு பல நகரங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
சீனா – ‛ஒமைக்ரான் எக்ஸ்.இ’
சீனாவில் ஒமைக்ரானின் உருமாற்றமடைந்த வைரசால் தான் பாதிப்பு அதிகரிப்பதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்தது. இந்த நிலையில் சீனாவில் பரவி வரும் புதிய வகை ‛ஒமைக்ரான் எக்ஸ்.இ’ வைரஸ் தொற்று இந்தியாவில் ஒருவருக்கு கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா – பத்து மடங்கு வேகம்
ஒமைக்ரானின் துணை திரிபான எக்ஸ்.இ வகை கொரோனா மும்பையை சேர்ந்த ஒருவருக்கு இத்தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அவரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதாக தெரிவித்த மும்பை மாநகராட்சி, இது 10 மடங்கு வேகமாக பரவக்கூடியது என எச்சரித்துள்ளது. இதனால், மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரமடைய உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள் || உலகிலேயே உயரமான முத்துமலை முருகன் சிலை அமைப்பு