Monday, February 6, 2023
Homeஆன்மிகம்ராசி பலன்கள் (04-12-2022)

ராசி பலன்கள் (04-12-2022)

இன்றைய நாள் (04-12-2022)

தமிழ் ஆண்டு, தேதி – சுபகிருது, கார்த்திகை 18
நாள் – சம நோக்கு நாள்
பிறை – வளர்பிறை

திதி

சுக்ல பக்ஷ துவாதசி – Dec 04 05:34 AM – Dec 05 05:58 AM

சுக்ல பக்ஷ திரயோதசி – Dec 05 05:58 AM – Dec 06 06:47 AM

நட்சத்திரம்

அஸ்வினி – Dec 04 06:16 AM – Dec 05 07:15 AM

கரணம்

பவம் – Dec 04 05:34 AM – Dec 04 05:43 PM

பாலவம் – Dec 04 05:43 PM – Dec 05 05:58 AM

கௌலவம் – Dec 05 05:58 AM – Dec 05 06:19 PM

யோகம்

வரியான் – Dec 04 04:34 AM – Dec 05 03:41 AM

பரீகம் – Dec 05 03:41 AM – Dec 06 03:07 AM

வாரம்

ஞாயிற்றுக்கிழமை

சூரியன் மற்றும் சந்திரன் நேரம்

சூரியோதயம் – 6:23 AM
சூரியஸ்தமம் – 5:56 PM

சந்திரௌதயம் – Dec 04 3:11 PM
சந்திராஸ்தமனம் – Dec 05 3:46 AM

அசுபமான காலம்

இராகு – 4:29 PM – 5:56 PM

எமகண்டம் – 12:09 PM – 1:36 PM

குளிகை – 3:03 PM – 4:29 PM

துரமுஹுர்த்தம் – 04:24 PM – 05:10 PM

தியாஜ்யம் – 03:05 AM – 04:45 AM

சுபமான காலம்

அபிஜித் காலம் – 11:46 AM – 12:33 PM

அமிர்த காலம் – 11:45 PM – 01:25 AM

பிரம்மா முகூர்த்தம் – 04:46 AM – 05:34 AM

ஆனந்ததி யோகம்

அனந்தம்

ஞாயிறு ஹோரை

காலை

06:00 – 07:00 – சூரி – அசுபம்
07:00 – 08:00 – சுக் – சுபம்
08:00 – 09:00 – புத – சுபம்
09:00 – 10:00 – சந் – சுபம்
10:00 – 11:00 – சனி – அசுபம்
11:00 – 12:00 – குரு – சுபம்

பிற்பகல்

12:00 – 01:00 – செவ் – அசுபம்
01:00 – 02:00 – சூரி – அசுபம்
02:00 – 03:00 – சுக் – சுபம்

மாலை

03:00 – 04:00 – புத – சுபம்
04:00 – 05:00 – சந் – சுபம்
05:00 – 06:00 – சனி – அசுபம்
06:00 – 07:00 – குரு – சுபம்

வாரசூலை

சூலம் – மேற்கு

பரிகாரம் – வெல்லம்

இன்றைய ராசிபலன்(04-12-2022)

மேஷம் எந்தவொரு செயலிலும் அவசரமின்றி நிதானத்துடன் செயல்பட வேண்டும். தேவையில்லாத சிந்தனைகளின் மூலம் மனதில் ஒருவிதமான பயம் ஏற்படும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். அறிமுகமாகும் புதிய நபர்களிடம் தேவையற்ற விஷயங்களைப் பகிர்வதை தவிர்ப்பது நல்லது. கூட்டு வியாபாரம் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சூழ்நிலைகளை அறிந்து செயல்பட வேண்டும். மேன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

அஸ்வினி : நிதானம் வேண்டும்.

பரணி : திருப்தியான நாள்.

கிருத்திகை : மேன்மை உண்டாகும்.

ரிஷபம் ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். வெளியூர் தொடர்பான வர்த்தக பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் ஏற்படும். புதுவிதமான கனவுகள் உண்டாகும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். எதிர்பாராத பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவங்கள் உண்டாகும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். பெருமை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

கிருத்திகை : நெருக்கடிகள் உண்டாகும்.

ரோகிணி : மேன்மையான நாள்.

மிருகசீரிஷம் : கவனம் வேண்டும்.

மிதுனம் பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் மேம்படும். புதிய நுட்பமான சிந்தனைகள் உண்டாகும். மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். வர்த்தகம் சார்ந்த பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். ஜவுளி வியாபாரம் தொடர்பான பணிகளில் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபம் உண்டாகும். ஆதரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

மிருகசீரிஷம் : பொறுப்புகள் மேம்படும்.

திருவாதிரை : மகிழ்ச்சியான நாள்.

புனர்பூசம் : இன்னல்கள் குறையும்.

கடகம் மனதில் குடும்ப உறுப்பினர்களை பற்றிய சிந்தனைகள் மேம்படும். தொழில் நிமிர்த்தமான பயணங்கள் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். வழக்கு தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். மனை சார்ந்த பணிகளில் லாபம் அடைவீர்கள். உலகியல் நடவடிக்கைகளின் மூலம் மனதில் மாற்றம் ஏற்படும். கல்வி சார்ந்த பணிகளில் குழப்பங்கள் ஏற்பட்டாலும், அதை நிவர்த்தி செய்து கொள்வதற்கான ஆலோசனைகளும் கிடைக்கும். நட்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

புனர்பூசம் : சிந்தனைகள் மேம்படும்.

பூசம் : சாதகமான நாள்.

ஆயில்யம் : ஆலோசனைகள் கிடைக்கும்.

சிம்மம் மனதில் புதுவிதமான தன்னம்பிக்கை உண்டாகும். உத்தியோக மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். சமூகம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். பத்திரம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். வேலையாட்களின் மூலம் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். அக்கம்பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உதவி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்

மகம் : தன்னம்பிக்கை உண்டாகும்.

பூரம் : முன்னேற்றம் ஏற்படும்.

உத்திரம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

கன்னிகுடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். தனவரவில் நெருக்கடியான சூழல் ஏற்படும். வாக்குறுதிகள் அளிப்பதை தவிர்க்கவும். அடுத்தவர்களை பற்றிய விமர்சனங்களை தவிர்க்கவும். நிதானமான பேச்சுக்கள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். கோப உணர்வுகளை குறைத்து கொள்ளவும். வெளி உணவுகளை தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது. வியாபார பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். புதிய நபர்களிடம் பொறுமை வேண்டும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திரம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.

அஸ்தம் : விமர்சனங்களை தவிர்க்கவும்.

சித்திரை : பொறுமை வேண்டும்.

துலாம்தனிப்பட்ட ஆசைகள் மற்றும் விருப்பங்கள் நிறைவேறும். வியாபார பணிகளில் சில சூட்சுமங்களை கற்றுக்கொள்வீர்கள். அலுவலக பணிகளில் மதிப்பு மேம்படும். உடல் தோற்றப்பொலிவு மேம்படும். உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் சாதகமாக பயன்படுத்திக் கொள்வீர்கள். புத்திசாலித்தனமான செயல்களின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். அன்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை

சித்திரை : விருப்பங்கள் நிறைவேறும்.

சுவாதி : தோற்றப்பொலிவு மேம்படும்.

விசாகம் : வெற்றி கிடைக்கும்.

விருச்சிகம்வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். நீண்ட நாட்களாக மனதை உறுத்திக் கொண்டிருந்த சில விஷயங்களுக்கு தெளிவு கிடைக்கும். இழுபறியாக இருந்துவந்த வேலைகள் நிறைவு பெறும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். வழக்கு சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான சூழல் அமையும். பக்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

விசாகம் : சாதகமான நாள்.

அனுஷம் : தெளிவு கிடைக்கும்.

கேட்டை : மகிழ்ச்சியான நாள்.

தனுசு

மனதிற்கு மகிழ்ச்சியான காரியங்கள் நடக்கும். வியாபாரப் பணிகளில் வீண் அலைச்சல்கள் உண்டாகும். பிள்ளைகளின் கல்வியில் கவனம் செலுத்துவீர்கள். வெளி உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் உண்டாகும். எதிர் பாலினத்தவரிடம் பழகும் போது கவனம் வேண்டும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். இலக்கியம், கதை, கவிதை துறைகளில் இருப்பவர்களுக்கு புகழ் கிடைக்கும். போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

மூலம் : அலைச்சல்கள் உண்டாகும்.

பூராடம் : புதுமையான நாள்.

உத்திராடம் : புகழ் கிடைக்கும்.

மகரம்செய்தொழிலில் மேன்மைக்கான வாய்ப்புகள் உண்டாகும். வேளாண்மை சார்ந்த பணிகளில் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் ஆதாயம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். வியாபாரம் நிமிர்த்தமான செயல்பாடுகளில் புதுவிதமான அனுபவம் ஏற்படும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வீடு, வாகனத்தை சரி செய்வீர்கள். அரசியல்வாதிகளுக்கு சாதகமான சூழல் அமையும். தெளிவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

உத்திராடம் : ஆதாயம் உண்டாகும்.

திருவோணம் : அனுபவம் கிடைக்கும்.

அவிட்டம் : சாதகமான நாள்.

கும்பம் மறைந்திருக்கும் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றங்கள் சிலருக்கு சாதகமாக அமையும். தகவல் தொடர்பு துறைகளில் இருப்பவர்களுக்கு லாபம் உண்டாகும். முயற்சிக்கு உண்டான பலன்கள் மற்றும் அதற்கான அங்கீகாரம் கிடைக்கும். திருப்பணி சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். எதிர்பாராத அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் சிலருக்கு ஏற்படும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை

அவிட்டம் : இடமாற்றங்கள் ஏற்படும்.

சதயம் : அங்கீகாரம் கிடைக்கும்

பூரட்டாதி : வாய்ப்புகள் ஏற்படும்.

மீனம்உத்தியோக பணிகளில் நம்பிக்கையுடன் செயலாற்றுவதன் மூலம் மேன்மை அடைவீர்கள். தனவரவுகளில் எதிர்பாராத உதவி கிடைக்கும். குடும்பத்தில் வெளி நபர்களால் சிறு குழப்பம் ஏற்படலாம். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். குடும்பத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்களின் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். ஆக்கப்பூர்வமான நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

பூரட்டாதி : மேன்மையான நாள்.

உத்திரட்டாதி : பிரச்சனைகள் நீங்கும்.

ரேவதி : உதவி கிடைக்கும்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments