பரமக்குடி நகர் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்
பரமக்குடி நகர் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் சந்தை கடை அருகே உள்ள முருகன்கோயில் வளாகத்தில் நடைபெற்றது. இக்கூட்டம் அ.தி.மு.க இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலைமையில் நடைபெற்றது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சதன்பிரபாகர், மாவட்ட துணைச் செயலாளர் பாதுஷா, நகர் செயலாளர் ஜமால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பரமக்குடி நகர் அம்மா பேரவை செயலாளர் வடமலையான் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் பூத் கமிட்டி பொறுப்பாளரும், அதிமுக மாநில அமைப்புச் செயலாளருமான சுதா பரமசிவன் பரமக்குடி தொகுதிக்கு உட்பட்ட 32, 33, 34, 35, 36 ஆகிய வார்டுகளில் புதிதாக நியமிக்கப்பட்ட பூத்கமிட்டி செயலாளர்களை நேரில் அழைத்து ஆலோசனை நடத்தினர். இந்நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன், வர்த்தக அணி செயலாளர் உதுமான் அலி, தகவல் தொழில்நுட்ப ஒன்றிய செயலாளர் துரைஇராமநாதன், நகர் மன்ற உறுப்பினர் கண்ணன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.