Thursday, January 2, 2025
Homeஆன்மீகம்கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

பி.ராஜாராம், திருநின்றவூர், திருவள்ளூர்.

*விரும்பிய வாழ்க்கை கிடைக்க யாரை வழிபடலாம்?

ராதையுடன் உள்ள கிருஷ்ணருக்கு புதன்தோறும் மாலையில் விளக்கேற்றுங்கள்.

சி.கங்கா, பப்பன்கிலேவ், டில்லி.

*வீட்டில் குழலுாதும் கிருஷ்ணர் இருக்கலாமா?

வீணையுடன் இருக்கும் சரஸ்வதியை போல குழலுாதும் கிருஷ்ணர் படமும் இருக்கலாம்.

எம்.மயூரா, ஹலசூரு, பெங்களூரு.

*கிருஷ்ணருக்கு பிடித்தது முறுக்கு, சீடையா…

ஆமாம்… குழந்தையைப் போல நொறுக்குத்தீனிகளை விரும்பி சாப்பிடுவான்.

எம்.கணேஷ், திருமங்கலம், மதுரை.

*கிருஷ்ண அவதாரத்தின் நோக்கம் என்ன?

அதர்மத்தை அழிக்கவும், தர்மத்தைக் காக்கவும் அவதரித்தார்.

ஆர்.செல்வம், எட்டையபுரம், துாத்துக்குடி.

*கிருஷ்ண ஜெயந்தி அன்று பகவத்கீதை படிக்கலாமா…

படிக்கலாம். பாகவதத்தில் உள்ள 10வது அத்தியாயத்தை படியுங்கள்.

ஆர்.அகல்யா, ராமநாதபுரம், கோயம்புத்துார்.

*தேய்பிறை எட்டாம் நாளில் குழந்தை பிறந்தால் தோஷமா…

இந்த நாளில் கிருஷ்ணர் பிறந்ததால் தோஷம் இல்லை.

பி.தண்டபாணி, திருவாமத்துார், விழுப்புரம்.

*கிருஷ்ணருக்கு மயில்தோகை சூட்டுவது ஏன்?

அழகு, அன்பு, துாய்மையின் அடையாளம் இது.

கே.காவ்யா, நத்தம், திண்டுக்கல்.

*பாவம் போக பரிகாரம் சொல்லுங்கள்.

மாயனை மன்னு வடமதுரை மைந்தனை…’ எனத் தொடங்கும் திருப்பாவை பாடலை தினமும் பாடுங்கள்.

எல்.காமாட்சி, அகத்தீஸ்வரம், கன்னியாகுமரி.

*கிருஷ்ணர் பூரண அவதாரமா…

திருவிளையாடல் நிகழ்த்தி, கீதையை உபதேசித்து தர்மத்தை காப்பவர் என்பதால் இவரே பூரண அவதாரம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments