கேரளாவில் நிலச்சரிவில் சிக்கி 41 பேர் உயிரிழந்ததையடுத்து 225 வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விமானப்படை ஹெலிகாப்டர்களும் அனுப்பப்பட்டுள்ளன.
கேரளாவில் பெய்து வரும் கனமழையால் வயநாடு மாவட்டம் முண்டக்கை, மேப்பாடி உள்ளிட்ட 3 இடங்களில் 4 மணி நேரத்தில் 3 இடங்களில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பலி எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.
மண்சரிவு ஏற்பட்டவுடன் உடனடியாக இராணுவத்தின் உதவி கோரப்பட்டது. இதையடுத்து காலாட்படை பட்டாலியனை சேர்ந்த 225 பேர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மருத்துவ அதிகாரிகள் குழு தலைமையில், 40 பேர் கொண்ட குழுவினர் மீட்பு பணியில் உதவ தயாராக வைக்கப்பட்டுள்ளனர்.
குன்னூர் கண்டோன்மென்ட்டில் இருந்து இரண்டு அணிகளும் வயநாடு விரைகின்றன. தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில் விமானப்படையின் ஏஎல்எச் மற்றும் எம்ஐஐ 7 ஹெலிகாப்டர்களும், சாரங் ரக ஹெலிகாப்டர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.